இயேசுவைக் காட்சியில் அழைத்தல் CALLING JESUS ON THE SCENE 64-0319 வியாழக்கிழமை மாலை, மார்ச் 19, 1964 டென்ஹாம் ஸ்பிரிங்ஸ் உயர்நிலைப்பள்ளி, டென்ஹாம் ஸ்பிரிங்ஸ், லூசியானா, அமெரிக்கா சகோ.வில்லியம் பிரன்ஹாம் ùNn§: 64-0319 - இயேசுவைக் காட்சியில் அழைத்தல் நாம் கர்த்தருடைய வார்த்தையை வாசிப்போம். மத்தேயு சுவிசேஷம் 8-ம் அதிகாரம், 23-வது வசனத்திலிருந்து நாம் இதை வாசிக்கிறோம்: அவர் படவில் ஏறினபோது, அவருடைய சீஷர்கள் அவருக்குப் பின்சென்றார்கள். ... அப்பொழுது படவு அலைகளினால் மூடப் படத்தக்கதாய் கடலில் பெருங்காற்று உண்டா யிற்று; அவரோ நித்திரை பண்ணிக் கொண்டிருந்தார். அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து, அவரை எழுப்பி: ஆண்டவரே, எங்களை இரட்சியும், மடிந்து போகிறோம் என்றார்கள். அதற்கு அவர்: அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார்; உடனே, மிகுந்த அமைதல் உண்டாயிற்று. அந்த மனுஷர்கள் ஆச்சரியப்பட்டு: இவர் எப்படிப்பட்டவரோ, காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்றார்கள். 2 இப்போது ஜெபிக்க நாம் தலைகளைத் தாழ்த்துவோம். "3 எங்கள் பரலோக பிதாவே, காற்றையும் கடலையும் தமக்குக் கீழ்ப்படியச் செய்யும் அந்தப் பெரியவர் எங்களோடு இருக்கிறார் என்பதை அறிந்து இன்றிரவு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அவர் இன்றும் உயிருள்ளவர் என்பதற்கும், அவர் நித்தியமானவர், அவர் ஒருபோதும் மரிக்க முடியாது என்பதற்கும் இந்த பெரிய சாட்சியை நாங்கள் பெற்றிருப்பதற்காக உமக்கு நன்றி உள்ளவர்களாயிருக்கிறோம். அவர் சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறார், மேலும் இந்நாட்களிலுள்ள மனுஷர்களாகிய எங்களுக்குத் தமது மிகுந்த இரக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். நாங்கள் தேவை யுள்ள ஜனங்கள் ஆண்டவரே, உம்மைத் தவிர வேறொருவரும் எங்கள் தேவைகளைச் சந்திக்க முடியாத அளவுக்குத் தேவையுள் ளவர்களாய் இருக்கிறோம். ஆகையால், இன்றிரவு எங்கள் கூட்டத்திற்குள் நீர் இறங்கி வந்து, எங்கள் பாவங்களை மன்னித்து, எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணி, எங்கள் வியாதிகளையும் உபத்திரவங்களையும் சுகமாக்குவதன் மூலம் உம்மை எங்களுக்கு வெளிப்படுத்தும்படி உம்மை நோக்கிப் பார்க்கிறோம் ஆண்டவரே. இன்றிரவு நாங்கள் எங்கள் வீடுகளுக்குச் செல்லும் போது, ""வழியிலே அவர் நம்முடனே பேசினபோது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில் லையா?"" என்று எம்மாவு ஊருக்குச் சென்றவர்கள் சொன்னதுபோல, நாங்களும் மகிழ்ச்சியுடன் சொல்லத்தக்கதாய் இரும். இதை அவருடைய நாமத்தில் கேட்கிறோம். ஆமென்." நீங்கள் அமரலாம். 4 நான் ஏறக்குறைய சகேயுவைப் போலவே இருக்கிறேன்; இந்த மேடைகள் எனக்கு எப்போதும் மிகவும் குட்டையாக இருக்கின்றன. வியாதிகளுக்காக ஜெபிப் பதற்கு முன்பு, நான் உங்களுடன் சில நிமிடங்கள் பேச விரும்புகிறேன். உங்களின் சிறந்த ஒத்துழைப்புக்காகவும், ஆவியானவரை விசுவாசிப்பதற்காகவும் உங்களுக்கு நன்றி. நேற்றிரவு நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது, அது அவருடைய ஆசீர்வாதங்களின் பெரும் பொழிவாக இருக்கும் என்று நம்பினோம். 5 நாம் எதற்காக இங்கே இருக்கிறோம் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் எதைக் கேட்கி றீர்களோ அதைப் பெற்றுக்கொள்ளும்படி, அவருடைய பிரசன்னத்தில் உங்கள் விசுவாசத்தை அதிகரிக்க முயற்சிப்பதே ஆகும். அப்போது, விசுவாசத்தினால், நீங்கள் நம்புகிறீர்கள். "6 இப்போது, நினைவில் கொள்ளுங்கள், ஒவ்வொரு மீட்பின் ஆசீர்வாதமும் ஏற்கனவே கிரயத்துக்கு வாங்கப்பட்டுள்ளது. அதற்கான விலை செலுத்தப்பட்டுவிட்டது, அதை நீங்கள் பெற்றுக்கொள்ள ஒரே ஒரு வழிதான் உண்டு, அதாவது அதை நம்பி அதை ஏற்றுக்கொள்வதுதான். ""அவர் நமது அறிக்கையின் பிரதான ஆசாரியராக இருக்கிறார்."" எபிரெய நிருபம் அங்கே சொல்லுகிறது, ""அவர் நமது அறிக்கையின் (profession) பிரதான ஆசாரியராக இருக்கிறார்."" அறிக்கையிடுவதும் (To profess), ஒத்துக்கொள்வதும் (confess) ஒன்றுதான், நிச்சயமாக. எனவே நாம்... அவர் நமது அறிக்கையின் பிரதான ஆசாரியராக இருக்கிறார், ஆகையால் அவர் அதைச் செய்து முடித்துவிட்டார் என்று நாம் முதலில் அறிக்கை செய்யும் வரை, அவரால் நமக்காக எதையும் செய்ய முடியாது. அதன்பின்பு நாம் அதை அறிக்கை செய்யும் போது, அதைச் செயல்படுத்துவதற்கும் அதைச் சரியாக்குவதற்கும் அவர் பிரதான ஆசாரியராகவும், மத்தியஸ்தராகவும் இருக் கிறார். ஆகையால் இன்றிரவு தேவன் தமது தயவினாலும் இரக்கத்தினாலும், தமது கிருபையின் ஐசுவரியத்தை நமக்குத் தருவார் என்று நம்பி நாம் ஜெபிக்கிறோம். இப்போது, நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்." "7 இப்போது நாம் போவதற்கு முன்பாக, நோயாளிகள் மீது கைகளை வைத்து ஜெபிக்கப்போகிறோம், ஆனால் அப்படிச் செய்ய வேண்டிய அவசியமில்லாத அளவுக்குப் போதுமான விசுவாசம் உங்களுக்கு இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் மேலே நோக்கி, ""ஆண்டவராகிய இயேசுவே, நான் உம்மை நம்புகிறேன். நான்-நான்..."" என்று சொல்லும்படி இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் வார்த்தையை விசுவாசிக்கிறார். " "8 இப்போது பாருங்கள், தேவன் நம்மிடமிருந்து வேறுபட்டவர். நாம்-நாம் உங்களை ஏதாவது செய்யச் சொல்லி, நீங்கள் அதை நம்பாவிட்டால், ""அவர்களை விட்டு விடுங்கள். அவர்கள் அதை நம்ப வேண்டிய அவசியமில்லை"" என்று நாம் சொல்வோம். ஆனால் நம்முடைய பிதாவாகிய தேவன் அப்படிப்பட்டவர் அல்ல. உங்களை நம்ப வைப்பதற்காக அவர் தொடர்ந்து வேறு ஏதாவது செய்வார். அவர் தமது வார்த்தையைக் காத்துக்கொள்ள முயற்சிக் கிறார், மேலும் அவர் தமது வார்த்தையைக் காத்துக்கொள்ளுவார். " 9 இப்போது அவர் செய்து கொண்டி ருக்கும் காரியங்களை அவர் செய்வதற்கான காரணம் என்னவென்றால், அவர் அவற்றைச் செய்வதாக வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். அவர் அதைச் செய்தாக வேண்டும் என்பதற்காக அல்ல; ஆனால் அவர் அதைச் செய்வதாக வாக்குத்தத்தம் செய்தார், அவர் எப்போதும் தமது வாக்குத்தத்தத்தைக் காத்துக்கொள்ளுகிறார் என்பதே நமது நம்பிக்கையாகும். 10 இப்போது நீங்கள் ஒவ்வொருவரும், உங்களுக்கு வியாதியஸ்தர்கள், அன்பான வர்கள் மற்றும் பலரும் இருக்கும்போது... இங்கே இருக்கும் இந்தச் சிறுமியைப் போல, அவள் மிகவும் இளையவள், அவள் அந்த நிலையில் இருக்கிறாள்; கூட்டம் நடைபெறும்போது, நீங்கள் விசுவாசிக்கும் போது, அந்தக் குழந்தையின் மீது உங்கள் கைகளை வையுங்கள். மற்றவர்களே, அன்பானவர்களைக் கொண்டிருப்பவர்களே, உங்கள் இருதயத்தில் அவர்களை நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்; விசுவாசத்தினால் ஜெபத்தில் தேவனுக்கு முன்பாக அவர்களை உயர்த்துங்கள். இப்போது, ஆகையால், விசுவாசியுங்கள். ஏதோ ஒன்று நிகழும்போது, நீங்கள்... "11 உங்களை நீங்களே நம்பவைக்க முடியாது. நீங்கள், அது ஒரு காரியம், அது உங்களுக்குள் இருக்கும் ஒரு குணம். ""விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும்,"" அது வெறும் கற்பனை அல்ல. ""அது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப் படாதவைகளின் நிச்சயமுமாயி ருக்கிறது."" மேலும் அனைத்தும், முழு கிறிஸ்தவ சர்வாயுதவர்க்கமும், நினைவில் கொள்ளுங்கள், விசுவாசத்தினாலே இருக் கிறது. அனைத்து இயற்கைக்கு அப்பாற் பட்டவைகளான அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, சாந்தம், இச்சையடக்கம் இவை அனைத்தும் காணப்படாத காரியங்கள். அதுதான் முழு கிறிஸ்தவ சர்வாயுதவர்க்கம். கிறிஸ்தவன் எப்போதும் தான் காணாத காரியங்களையே நோக்குகிறான், ஏனென்றால் அவன் ஒரு வாக்குத்தத்தத்தை நோக்கிக் கொண்டிருக் கிறான். " 12 சில காலத்திற்கு முன்பு, பல ஆண்டுகளுக்கு முன்பு, கறுப்பு தொண்டை அடைப்பான் நோயினால் (black diphtheria) மரித்துக்கொண்டிருந்த ஒரு சிறுவனுக்காக ஜெபிக்க, ஒருமுறை நான் ஒரு மருத்துவ மனைக்கு அழைக்கப்பட்டேன். இதை நான் பலமுறை குறிப்பிட்டிருக்கிறேன், ஏனென் றால் இது எனக்கு மிகச் சிறந்த ஒரு சம்பவமாகும். தகப்பன் சற்று வயதானவர், தாயும் அப்படியே. இந்த வாலிப பையனுக்கு சுமார் பதினான்கு வயது இருக்கும் என்று நினைக்கிறேன், அவன் அவர்களுடைய ஒரே பிள்ளை. அவன் கறுப்பு தொண்டை அடைப்பான் நோயினால் மரித்துக் கொண்டிருந்தான், அவனது இருதயத்தில் ஏதோ பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அவன் நினைவிழந்த நிலையில் இருந்தான். அவர்கள் வெறுமனே... அவன், ஓ, அவன்-அவன் மிகத் தத்தளித்து உயிருடன் இருந்தான்; அவனுடைய நாடித்துடிப்பு என்னவாக இருந்தது என்பதை நான் மறந்துவிட்டேன்; சுவாசம் மிகவும் குறைவாக இருந்தது. "13 அந்த வயதான தகப்பன் கூட்டத்திற்கு வந்து, மேலாளரையும், எல்லாரையும் பார்த்து கெஞ்சிக்கொண்டே இருந்தார். ""வந்து ஜெபியுங்கள்! வந்து ஜெபியுங்கள்! அவ்வளவு தான், மருத்துவமனைக்கு வந்து ஜெபியுங்கள்."" " "14 அதற்கு மேலாளர், ""அவனைக் கூட்டத்திற்குக் கொண்டு வாருங்கள்,"" என்றார்." "அதற்கு அவர், ""நாங்கள் அவனை மருத்துவமனையிலிருந்து நகர்த்த முடியாது. அவன் சாகக்கிடக்கிறான். சகோதரர் பிரான்ஹாம் மட்டும் வந்து, தேவனிடம் கேட்டால், தேவன் அதை அருளுவார்,"" என்று சொன்னார்." """என்ன ஒரு விசுவாசம்!"" என்று நான் நினைத்தேன். " "15 நான் மருத்துவமனைக்குச் சென்றேன், ஆனால் மருத்துவர்கள் என்னை உள்ளே அனுமதிக்கவில்லை. அவர்கள், ""இல்லை, நீங்கள் திருமணமானவர், உங்களுக்குப் பிள்ளைகள் இருக்கிறார்கள்,"" என்றார்கள். பில்லி பால் அப்போது சிறியவனாக இருந்தான். ""நீங்கள் உள்ளே செல்ல முடியாது, ஏனென்றால் உங்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது,"" என்று சொன்னார்கள். " "16 அப்போது நான், ""இப்போது, மருத்து வராகிய நீங்களே ஒரு கத்தோலிக்கர் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்,"" என்றேன். நான் சொன்னேன், ""அந்தக் குழந்தை கத்தோலிக்கராக இருந்து, பாதிரியார் அந்தக் குழந்தைக்கு இறுதிச் சடங்குகளைச் செய்ய விரும்பினால், அவரை உள்ளே செல்ல அனுமதிப்பீர்களா?"" " "17 அதற்கு அவர், ""அது வேறு. பாதிரியாருக்குக் குழந்தைகள் இல்லை. ஆனால் நீங்கள் அந்தக் கிருமியை உங்கள் குழந்தைக்குக் கொண்டு செல்வீர்கள்,"" என்றார். " "18 நான் சொன்னேன், ""ஆனால், ஐயா, கவனியுங்கள். பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். நான் ஒரு காகிதத்தில் கையெழுத்திடுகிறேன். பொறுப்பை நானே ஏற்றுக்கொள்கிறேன். அதற்காக உள்ளே செல்வதற்குப் போதுமான விசுவாசம் என்னிடம் இல்லையென்றால், எனக்கு முதலில் உள்ளே செல்ல எந்த வேலையும் இல்லை."" நான் சொன்னேன், ""இப்போது நினைத்துப் பாருங்கள், அந்தச் சிறுவன் கத்தோலிக்கனாக இருந்து, அவன் மரித்துக் கொண்டிருந்தால்; தேவாலயத்தின் இறுதிச் சடங்குகளைச் செய்வதிலிருந்து பாதிரியாரை நீங்கள் எந்த வகையிலாவது தடுப்பீர்களா?"" அவர், ""இல்லை, நான் அப்படிச் செய்ய மாட்டேன்,"" என்றார்." "19 நான் சொன்னேன், ""ஒரு பாதிரியார் கத்தோலிக்கருக்கு எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் நான் அவர்களுக்கு."" " "20 அவர், ""சரி,"" என்றார், கடைசியாக ஒப்புக்கொண்டார். அவர் என்னை ஒரு கு க்ளக்ஸ் கிளான் (Ku Klux Klan) போன்ற ஏதோ ஒரு விதமான உடை அணிவித்து, என் மேல் இதையெல்லாம் போட்டு, மரித்துக் கொண்டிருக்கும் அந்தச் சிறுவனிடத்தில் என்னை உள்ளே அழைத்துச் சென்றார். " "21 தாயும் தகப்பனும் மறுபுறம் மண்டியிட்டிருந்தார்கள். நான் ஒரு எளிய சிறிய ஜெபத்தை ஏறெடுத்தேன், ""ஆண்ட வராகிய இயேசுவே, இந்தத் தந்தை மற்றும் தாயின் விசுவாசத்தின் அடிப்படையில், இந்தச் சிறுவனை எழுப்பும்படி நான் உம்மை நம்புகிறேன்,"" என்று சொல்லி, அந்தச் சிறுவன் மீது என் கைகளை வைத்தேன். அவன் மூன்று, ஏறக்குறைய மூன்று நாட்களாக நினைவில்லாமல் இருந்தான் என்று நினைக்கிறேன், சற்றே சுவாசித்துக்கொண்டிருந்தான். நான் எழுந்து, ""ஆமென்,"" என்றேன். ஒரு நிமிடம் ஜெபித்துவிட்டு, எழுந்தேன்." "22 அந்த வயதான தகப்பன் தாயைத் தன் கரங்களில் அணைத்துக்கொண்டு, ""இதை நினைத்துப்பார் அன்பே, நம் பையன் சுகமாகிவிட்டான்!"" என்றார். சுகமானதற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஆனாலும் அவர்கள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து, கர்த்தருக்கு நன்றி சொல்லிக் கொண்டி ருந்தார்கள். " "23 அப்போது அங்கிருந்த அந்தச் சிறிய நர்ஸ், சிறிய பெண், ஒரு இளம் பெண், அவளுக்கு ஏறக்குறைய பதினெட்டு, இருபது வயது இருக்கும். அவள் தன் நர்ஸ் பட்டையை அணிந்திருந்தாள், அவள்... அல்லது அவள் ஒரு பட்டதாரி நர்ஸ். அவள் சொன்னாள், ""ஐயா, உங்களுக்குப் புரிய வில்லை என்று நான் பயப்படுகிறேன். பையன் மரித்துக் கொண்டிருக்கிறான்,"" என்றாள். " "24 அதற்கு அவர், ""ஓ, இல்லை. பையன் பிழைக்கப்போகிறான்,"" என்றார். தகப்பன் அப்படிச் சொன்னார். அவள் சொன்னாள், ""உங்களுக்குக் கொடுக்கப்பட்ட இது போன்ற தவறான எண்ணத்தினால், உங்கள் பையன் சாகப்போகிறான் என்று தெரிந்தும், நீங்கள் எப்படி இப்படி நடந்துகொள்ள முடியும்?"" அவர் சொன்னார், ""அது தவறான எண்ணம் அல்ல."" அவர்..." "25 அவள் சொன்னாள், ""கவனியுங்கள்."" இப்போது நான்... இங்கே ஒரு மருத்துவர் அமர்ந்திருக்கலாம். எனக்கு மருத்துவத்தைப் பற்றியும், மருத்துவச் சொற்களின் கருவி களைப் பற்றியும் தெரியாது. அவர்கள் அவனுக்கு ஏதோ ஒரு விதமான கார்டியோகிராம் (cardiogram) கொடுத் தார்கள், அவனது இருதயம் மிகவும் பலவீனமாக இருந்தது. அது நீண்ட நேரமாகப் பலவீனமாக இருந்தது. அந்த மருத்துவர் சொன்னதை அந்த நர்ஸ் திரும்பச் சொன்னாள், ""வரலாற்றிலேயே, ஒரு இருதயம் அவ்வளவு பலவீனமான பிறகு, அது மீண்டும் துடித்ததாக ஒருபோதும் அறியப்படவில்லை,"" என்றாள். " "26 அந்த முதியவரின் பார்வையை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். தகப்பன் போன்ற அந்த வயதான மனிதர் நடந்து வந்து, அந்தச் சிறிய நர்ஸின் தோளில் கை வைத்தார். அவர் சொன்னார், ""சகோதரியே, நீ அந்த வரைபடத்தைப் பார்க்கிறாய்."" ""உனக்குத் தெரிந்ததெல்லாம் அதைப் பார்ப்பது மட்டும்தான். ஆனால், நான் ஒரு தெய்வீக வாக்குத்தத்தத்தைப் பார்க்கிறேன்,"" என்றார். " 27 அந்தப் பையன் இப்போது ஆப்பிரிக்காவில் மிஷனரியாக இருக்கிறான், மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். பார்த்தீர்களா? பார்த்தீர்களா? நீங்கள் எதைப் பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்து அது இருக்கிறது, பாருங்கள். அவர் விசுவாசித்தார். "28 இப்போது, அது அதே விசுவாசம், ""நீர் வந்து என் பிள்ளையின் மேல் உம்முடைய கைகளை வைத்தால்."" ""நீர் ஒரு வார்த்தை சொன்னால், என் வேலைக் காரன்..."" பாருங்கள், அது உங்களிடம் உள்ள ஒன்று. நீங்கள்-நீங்கள்..." 29 அப்போது அது-அது பாசாங்கு செய்வது அல்ல. அந்த வயதான மனிதர் அதை நம்பினார். அவர் ஏதோ ஒன்றைப் பற்றிக்கொண்டார். "30 அவருடைய வஸ்திரத்தைத் தொட்ட அந்தப் பெண். ""நான் அவருடைய வஸ்திரத்தையாகிலும் தொட்டால்!"" அதுதான். உங்கள் இருதயத்தின் ஆழத்தில் அந்த விசுவாசத்தை நீங்கள் பற்றிக்கொள்ள வேண்டும். இது எதைப் போலிருக்கிற தென்றால்..." 31 உங்களுக்குத் தெரியும், ஆண்களே, நீங்கள் சரியான கணவனாக இருந்தால், உங்கள் மனைவியை நேசிப்பது போல உலகத்தில் எந்தப் பெண்ணையும் நேசிக்க மாட்டீர்கள். மற்ற பெண்கள் இன்னும் சிவப்பானவர்களாக இருக்கலாம். இன்னும் அழகான பெண்களாகவும், இன்னும் பலவாறாகவும் இருக்கலாம். ஆனால் ஏதோ ஒன்று, நீங்கள் உண்மையில் உங்கள் மனைவியை நேசித்தால், உள்ளே ஏதோ ஒன்று இருக்கிறது, அவள் பார்ப்பதற்கு எப்படி இருக்கிறாள் என்பதை நீங்கள் கவனிக்க மாட்டீர்கள். நீங்கள் அவளை நேசிக்கிறீர்கள். உங்களுக்கு ஏன் என்று தெரியாது, ஆனால் நீங்கள் அவளை நேசிக்கிறீர்கள். பெண்களே, நீங்களும் உங்கள் கணவனிடத்தில் அப்படியே இருக்கிறீர்கள். நீங்கள், நீங்கள் நேசிக்கிறீர்கள். வாலிபப் பெண்களே, உங்கள் காதலர்களிடத்திலும்; காதலர்களே உங்கள் காதலிகளிடத்திலும் அப்படியே இருக்கிறீர்கள். நீங்கள் நேசிக்கும் அந்த நபரைச் சந்தித்திருந்தால், நீங்கள் அவர்களை நேசிக்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரிந்த ஏதோ ஒன்று உள்ளே இருக்கிறது. 32 சரி, விசுவாசத்தைப் பற்றியதும் அதே காரியம்தான். அது நடக்கப்போகிறது என்று உங்களுக்குத் தெரியும். எத்தனை பேர் அதற்கு மாறாகச் சொன்னாலும், ஒரு நிழல் கூட இல்லை; நீங்கள் இன்னும் அதே காரியத்தை நம்புகிறீர்கள், ஏனென்றால் அது உண்மை யான, மெய்யான விசுவாசம். இன்றிரவு நாம் இந்தத் தலைப்பில் பேசும்போது, அதைக் கொண்டிருங்கள். 33 நான் அதிகமாகப் பேசிவிட்டேன், இப்போது கூட்டங்களில் வெகு நீண்ட காலமாக இருக்கிறேன், கிறிஸ்துமஸ் முதற்கொண்டு எனக்கு ஓய்வே இல்லை. மாறும் வானிலை, நேரம் மற்றும் பலவற்றால் என் தொண்டை கொஞ்சம் கரகரப்பாக இருக்கிறது. "34 இன்றிரவு நான் உங்களுடன், ""இயேசுவை எழுப்புங்கள்,"" அல்லது: ""இயேசுவைச் சம்பவ இடத்திற்கு அழைத்தல்"" என்ற தலைப்பில் பேச விரும்புகிறேன். " 35 நமது வேத வாசிப்பிலிருந்து, அங்கே ஒரு பெரிய கூட்டம் நடைபெற்றதைக் காண்கிறோம். இயேசு எங்கும் சுற்றித்திரிந்து, பெரிய அற்புதங்களைச் செய்தும், எப்போதும் நன்மையைச் செய்தும், தேவனுக்குப் பிரியமானதையே செய்தும் வந்தார். அவர் எப்போதும் தேவனைப் பிரியப்படுத்தினார், ஆனால் அவர் தம்மைத் தாமே பிரியப் படுத்திக்கொள்ளவில்லை என்று வேதம் சொல்லுகிறது. மேலும் அவர் யார் என்பதைத் தம்முடைய கிரியைகளினால் முழுமையாக வெளிப்படுத்தியிருந்தார் என்பதை நாம் காண்கிறோம். அவருடைய கிரியைகள் அவர் யார் என்பதை அடையாளம் காட்டின. 36 வல்லமை அவரிடமிருந்து புறப் பட்டது. அவர் நாள் முழுவதும் உவமைகளைப் போதித்துக்கொண்டிருந்தார், அவரிடமிருந்து வல்லமை புறப்பட்டது. மேலும் அவர்... கடலைக் கடந்து, அக்கரைக்குச் செல்லவிருந்தார். அவர் யாராக இருந்தாரோ, அதன் காரணமாக - அக்கரையில் ஒரு பெரிய வேலை காத்திருப் பதை அவர் அறிந்திருந்தார். அவர் மிகவும் களைத்திருந்தார். மக்கள் அவரை நம்பி, தங்கள் விசுவாசத்தினால் அவரைத் தொட்ட தாலும், பிறவற்றாலும், நாள் முழுவதும் அவரிடமிருந்து வல்லமை புறப்பட்டுச் சென்றிருந்தது. மேலும் அவர்... 37 வல்லமை அவரை விட்டு நீங்கியது, அவர் களைத்திருந்தார். எனவே படவு கலிலேயாக் கடலைக் கடந்து செல்லும் போது, சிறிது ஓய்வெடுக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள, அவர் படவின் பின்னணியத்தில் சென்று ஒரு தலைய ணையின் மேல் படுத்துக்கொண்டார் என்று வேதம் நமக்குச் சொல்லுகிறது. 38 அவருடைய சீஷர்கள் தங்கள் துடுப்புகளை எடுத்து, பாய்களை உயர்த்தி னார்கள், மாலுமிகள் செய்வது போலவே செய்தார்கள். அவர்கள், அதுதான் அவர்களுடைய, அவர்களில் அநேகருடைய தொழில். அவர்கள் அங்கே கடலில் மீனவர்களாக இருந்தார்கள், இந்தப் படகுகளை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அவர்கள் தங்கள் தொழிலுக்குத் திரும்பி யிருந்தார்கள், அன்று நடந்த காரியங்களைப் பற்றிப் பேசிக்கொண்டு, மிகுந்த மகிழ்ச்சியான நேரத்தை, ஒரு ஜூபிலி நேரத்தைக் கொண்டாடினார்கள். "39 உங்களுக்குத் தெரியும், அதில் ஏதோ ஒன்று இருக்கிறது, நம்முடைய கர்த்தராகிய இயேசு காரியங்களைச் செய்வதை நாம் பார்க்கும்போது, அது அவர்தான் என்று அறிந்துகொள்ளும்போது, வேறொன்றும் அதைச் செய்ய முடியாது, அவரே அதைச் செய்தார் என்று அறியும்போது, நாம் சும்மா... நாம் ஒன்றாகக் கூடும்போது, நாம் சும்மா... எல்லோரும் சாட்சி சொல்ல விரும்பு கிறார்கள். எல்லோரும் ஏதாவது சொல்ல விரும்புகிறார்கள், அவர்கள் அதைப் பற்றிப் பேச விரும்புகிறார்கள். உங்கள் சபையில் ஒரு எழுப்புதல் இருக்கலாம்; போதகர் ஒரு அற்புதமான செய்தியைப் பேசலாம், அல்லது சுவிசேஷகர், அல்லது யாராக இருந்தாலும்; அல்லது குறிப்பிட்ட ஏதோ ஒன்று நடப்பதை நீங்கள் பார்க்கலாம், அல்லது அக்கம் பக்கத்தில் உள்ள யாரோ ஒருவர் சுகமாவதைக் காணலாம். அக்கம்பக்கத்தினர் ஒன்றாகக் கூடி அதைப் பற்றிப் பேசுவார்கள். ""எவ்வளவு அற்புதம்! நீ அங்கே இருந்தாயா? நீ அதைப் பார்த்திருக்க வேண்டும். அது மிகச் சிறந்த ஒரு காரியமாக இருந்தது."" நிகழும் மற்ற எல்லாவற்றையும் விட மனிதனின் இருதயத்தை அதிகமாகப் பரவசப்படுத்தும் தேவனுடைய கிரியை களைக் குறித்து ஏதோ ஒன்று இருக்கிறது. அது... நாம் கர்த்தராகிய இயேசுவுடன் தொடர்புகொண்டு, அவர் செய்யும் காரியங்களைப் பார்க்கும்போது, அது மறக்க முடியாத அனுபவங்களாக இருக்கிறது, அவருடைய வழிகள் அவ்வளவு பெரியதாகவும் மற்றும் அற்புதமானதாகவும் இருக்கின்றன. " 40 இப்போது, அன்றைய தினத்தின் எழுப்புதலில் செய்யப்பட்ட கிரியைகளைக் குறித்து அவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள் என்பதை நாம் காண்கிறோம், இன்றிரவு நம்மையும் அதே விதமாக ஒப்பிட விரும்புகிறேன். 41 இந்தக் கடைசி பத்து, பதினைந்து ஆண்டுகளில், உலகம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய எழுப்புதல்களில் ஒன்றை நாம் இப்போதுதான் கண்டிருக்கிறோம் என்று நான் விசுவாசிக்கிறேன். இது ஒரு-ஒரு எழுப்பு தலாக இருந்தது, பில்லி சண்டே (Billy Sunday) நாட்களைப் போலவோ, அல்லது வெல்ஷ் (Welsh) எழுப்புதல் நாட்களைப் போலவோ, அல்லது வெஸ்லியன் (Wesleyan) எழுப்புதல் நாட்களைப் போலவோ, அல்லது மூடி (Moody) எழுப்புதல் அல்லது பில்லி சண்டே எழுப்புதலைப் போலவோ அல்ல, இது உலகம் முழுவதும் பரவிய ஒரு நிகழ்வாக இருந்தது. பெரிய சுகமளிக்கும் கூட்டங்களும் பெரிய எழுப்புதல் அக்கினியும் உலகிலுள்ள ஏறக்குறைய ஒவ்வொரு மலையிலும் எரிந்தன. இன்றிரவு, வெகு தொலைவில் ஆப்பிரிக்க நாடுகளிலும், கீழே சீனா மற்றும் ஜப்பானிலும், இந்த சுவிசேஷம் பிரசங்கிக்கப் படுகிறது, மேலும் உலகம் முழுவதும் இந்த நிமிடத்தில் மக்கள் சுகமடைந்து கொண்டி ருக்கிறார்கள். இது மிகப்பெரிய எழுப்புதல் களில் ஒன்றாக இருந்தது, ஏனென்றால், இது உலகம் காணும் கடைசி எழுப்புதல்களில் ஒன்று, உலகம் தழுவிய எழுப்புதல் என்று நான் நம்புகிறேன். 42 ஆனால் இப்போது, கடந்த சில வருடங்களாக, அது அமைதியாகிவிட்டது. முன்பு இருந்த அந்த உற்சாகத்தை மக்களிடம் நீங்கள் காணவில்லை. 43 பல வருடங்களுக்கு முன்பு, கர்த்தருடைய தூதன் ஆற்றங்கரையில் தோன்றி அதைச் சொன்னபோது, அந்த எழுப்புதலைத் துவங்கி வைக்கும் சிலாக்கியத்தைப் பரிசுத்த ஆவியானவரால் நான் பெற்றதை நினைவுகூருகிறேன். அது நிகழ்வதைப் பார்ப்பதும், எங்கும் ஊழியர்களின் இருதயங்களை அது பற்றி எரியச் செய்வதைப் பார்ப்பதும், எழுப்பு தல்கள் வெடித்தன. ஏன், நீங்கள் ஒரு கட்டிடத்திற்குள் நடந்து சென்றால் போதும், மக்கள் தங்கள் கட்டில்களிலிருந்தும் படுக்கைகளிலிருந்தும் எழுந்து, சுகமடைந்து நடந்து செல்வார்கள். நீங்கள் ஒரு வார்த்தை கூட சொல்ல வேண்டியதில்லை. சும்மா-சும்மா அங்கே இருந்தால் போதும், அவ்வளவுதான் தேவைப்பட்டது. 44 இல்லினாய்ஸ் மாநிலத்திலுள்ள வான்டாலியாவில் (Vandalia, Illinois) ஒரு இரவு எனக்கு நினைவிருக்கிறது. நான் கூட்டத்திற்குள் நடந்தேன், கூட்டத்திற்குள் வந்து ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆகியிருக்காது, அந்த இடத்தில் எங்கும் ஒரு பலவீனமான நபர் கூட இல்லை. சக்கர நாற்காலிகள் வெளியே தள்ளப்பட்டு குவிக்கப்பட்டன. குருடர்கள் பார்த்தார்கள், ஊமையும் செவிடுமானவர்கள் பேசினார்கள், மேலும்-மேலும் அது சும்மா... கர்த்தருடைய ஆவி அங்கே இருந்தது, அவர் அந்தக் குழு முழுவதையும் சுகமாக்கினார். எழுப்புதல் நடக்கும்போதுதான் உங்களால் எதையாவது செய்ய முடியும். ஆனால் அந்த எழுப்புதல் அக்கினி அணைந்துபோகட்டும், அப்போது உங்களால் கடினமாக... மக்கள் இன்னும் கிறிஸ்தவர்கள்தான், ஆனால் அவர்கள் அந்த ஆவிக்குள், எதையாவது செய்யக்கூடிய அந்தப் பெரிய சூழ்நிலைக்குள் புதுப்பிக்கப் படவில்லை. 45 இது ஒரு கொல்லன் பட்டறையில், ஒரு உலைக்களத்தில் இருப்பதைப் போன்றது. இரும்பை பட்டடையில் வைத்து அடிப்பதற்கு முன் அதைச் சூடாக்க வேண்டும். இல்லையென்றால், உங்களால் அதை ஒருபோதும் நேராக்க முடியாது. 46 ஒரு எழுப்புதலைப் பெறுவதற்கு அதுதான் தேவை, அதாவது அனைவரும் பரிசுத்த ஆவியின் அனலில் இருக்க வேண்டும், அது தேவனுடைய வல்லமையை கீழே கொண்டுவந்து ஒரு எழுப்புதலை அசைவாடச் செய்கிறது. அப்போது இரவும் பகலும், ஒவ்வொரு நிமிடமும், எல்லா இடங்களிலும் ஜெபக் கூட்டங்கள் நடக்கும். ஏன், மக்கள் அந்தத் திடலை விட்டு வெளியேறவே மாட்டார்கள்! "47 ஆர்கன்சாஸ் மாநிலத்திலுள்ள ஜோன்ஸ் போரோவில் (Jonesboro, Arka nsas), நான் எனது... ஏறக்குறைய எனது மூன்றாவது கூட்டத்தைத் தொடங்கியபோது எனக்கு நினைவிருக்கிறது. முதலில் செயின்ட் லூயிஸில் (St. Louis), பிறகு கார்னிங்கில் (Corning), அதன்பின் ஜோன்ஸ்போரோவில். ""கூட்டத்தில் இருபத்தெட்டாயிரம் பேர்"" என்று செய்தித்தாள் குறிப்பிட்டது. நகரத்திலிருந்து இருபது அல்லது முப்பது மைல்களுக்கு, கூடாரங்கள் அமைக்கப் பட்டிருந்தன. ஜோன்ஸ்போரோ என்ற அந்தச் சிறிய நகரத்தில் தங்குவதற்கு ஒரு பண்ணை வீடு கூட கிடைக்காது. மக்கள் மைல் கணக்கில் லாந்தர் விளக்குகளை எடுத்துக் கொண்டு, காடுகள் வழியாக நடந்து, பேருந்து பிடித்து வந்தார்கள். " 48 ஒரு மாலை வேளையில் ஆராதனை தொடங்குவதற்கு முன் நான் வனாந்தரத்தில் அமர்ந்து ஜெபித்துக்கொண்டிருந்தேன், இளம் பெண்கள் தங்கள் காலணிகளையும் காலுறை களையும் கக்கத்தில் இடுக்கிக்கொண்டு வருவதைக் கண்டேன். அவர்கள் அங்கே வருவதற்கு முன்பாக, நின்று தங்கள் கால்களில் உள்ள தூசியைத் தட்டிவிட்டு, தங்கள் காலுறைகளையும்-காலணிகளையும் அணிந்துகொண்டு கூட்டத்திற்குள் செல்வார்கள். 49 அவர்கள் தங்கள் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளை பழைய பருத்தி லாரிகளுக்கு அடியில் படுக்க வைத்து, அங்கேயே இரவும் பகலும் தங்கியிருப்பதை நான் பார்த்திருக் கிறேன்; மழை பெய்து, புயல் வீசும்போது, அவர்கள் மேல் காகிதங்களையும் தார்ப்பாய் களையும் பிடித்துக் கொண்டிருப்பார்கள்; கட்டிடத்திற்குள் நுழைவதற்காகக் காத்துக் கொண்டு, தங்கள் இடத்தை விட்டு நகர மாட்டார்கள். 50 அங்கேதான் குருடர்கள் பார்த்தார்கள், செவிடர்கள் கேட்டார்கள். இன்றிரவு ஊழியம் அதைவிட நூறு மைல்கள் முன்னேறி யிருக்கிறது, ஆனால் எழுப்புதல் அக்கினி அணைந்துவிட்டது. "51 மக்கள் அங்கே நடந்து வருவதைப் பாருங்கள்... சும்மா உங்கள் விரலை நீட்டி, ""சரி, சகோதரனே, நீங்கள் விசுவாசிக் கிறீர்களா?"" என்று சொன்னால் போதும். அவ்வளவுதான், அவர் வெளியேறிச் சென்று விடுவார். செய்ய வேண்டியதெல்லாம் அவ்வளவுதான். அவர்கள் விசுவாசித்தார்கள். எழுப்புதல் அசைவாடிக்கொண்டிருந்தது. " 52 இப்போது, இந்தச் சீஷர்கள் அதைப் பார்த்திருந்தார்கள், அந்த நாளில் செய்யப்பட்டதைக் கண்டு, இயேசு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்போது, ஒரு அமெச்சூர் வடிவத்தில் அவர்கள் மகிழ்ச்சியை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். 53 இப்போது நாம் வாழ்ந்து கொண்டி ருக்கும் இந்த அமைதியான காலத்தில், கூட்டங்களுக்கு இடையில் அல்லது எழுப்புதலுக்கும் அவருடைய வருகைக்கும் இடையில் அவர் ஒருவேளை ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்போது, எழுப்புதல் அப்படிப் பட்ட ஒன்றைச் செய்துகொண்டிருக்கிறது என்று நான் நினைக்கிறேன். இந்த எழுப்புதல் காலத்தில் நாம் கண்ட பெரிய மற்றும் அற்புதமான கிரியைகளை நினைத்து நாம் மகிழ்ச்சியடைகிறோம். உலகம் என்ன சொன்னாலும் பரவாயில்லை, அது நடந்ததை நாம் இன்னும் பார்த்தோம்! அது ஒரு அறிக்கை, அது உண்மைகள், அது செய்யப்பட்டது. 54 பாய்கள் நன்றாகப் போய்க் கொண்டிருக்கும்போது, அவர்கள் அவரைப் பற்றியும், அவருடைய செயல்கள் பற்றியும், அவருடைய உரிமைகோரல்கள் பற்றியும், அவருடைய மேசியாத் தன்மையைப் பற்றியும் பேச ஒரு வாய்ப்பை எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். அவர்களில் அநேகர்... இந்தச் சீஷர்களில், தாங்கள் பார்த்த காரியங்களைப் பற்றி ஒருவருக் கொருவர் பேசியிருக்கலாம். 55 நாம் செய்வது போலவே, ஷ்ரெவ்போர்ட்டில் (Shreveport) நடந்த எழுப்புதல் காலத்திலும், வேறொரு ஊரில் நடந்த எழுப்புதல் காலத்திலும், நாம் அதைப் பற்றிப் பேசுவோம். "56 இப்போது அப்படித்தான் அவர்கள் செய்து கொண்டிருந்தார்கள். நேற்றிரவு நாம் பேசியது போல சீமோன், ""சரி, அந்திரேயா அவரைப் பற்றி என்னிடம் சொன்னபோது, நான் கொஞ்சம் சந்தேகப்பட்டேன். ஆனால் நான் யார் என்றும் என் தகப்பன் யார் என்றும் அவர் என்னிடம் சொன்னபோது, அது என்னிலிருந்த ஊகங்கள் அனைத்தையும் அகற்றியது. நான்-நான் அப்போது அதை நம்பினேன்,"" என்று சொல்லியிருக்கலாம். " "57 பிலிப்பு வேறு சிலரிடம் சொல்லியிருக்கலாம்; அந்திரேயா சொல்லியி ருக்கலாம். கிணற்றடியில் இருந்த பெண்ணைப் பற்றி நேற்றிரவு பேசினோம். அவர்கள் அவளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்திருக்கலாம், அவர்கள் இப்படி ஏதாவது சொல்லும்போது: ""சகோதரர்களே, உங்களுக்குத் தெரியும், எனக்கு விசித்திரமான நேரம் என்னவென்றால், நான்-நாங்கள் உணவு வாங்கச் சென்றோம். நாங்கள் திரும்பி வந்து புதர்களுக்கு வெளியே நின்று, அவர் இந்தப் புகழ்பெற்ற பெண்ணிடம் பேசுவதைப் பார்த்தோம். 'ஆசாரியர்களில் யாராவது வந்து இதை, எங்கள் போதகர் இந்தத் தரத்திலுள்ள ஒரு பெண்ணிடம் பேசுவதைப் பார்த்தால், அவரைப் பற்றி என்ன சொல்வார்கள்?' என்று நாங்கள் எங்கள் இருதயங்களில் நினைத்தோம். ஆனால் அவர் அவளிடம் பேசுவதற்கு ஏதோ ஒரு நோக்கம் இருந்தது என்று நாங்கள் அவர்மீது நம்பிக்கை வைத்திருந்தோம் என்பதை நினைவுகூருகிறோம்." "58 ""பின்பு அவர் அவளிடம், 'போய் உன் புருஷனை இங்கே அழைத்துக்கொண்டு வா' என்று சொன்னபோது. அவள், 'எனக்குப் புருஷன் இல்லை' என்று சொன்னாள். எங்கள் இருதயங்கள் துடித்தன, ஏனென்றால் அங்கே ஒரு முறை தோல்வி ஏற்பட்டிருக்கிறது என்று நாங்கள் நினைத்தோம். அவளுக்குப் புருஷன் இல்லாதபோது, போய் அவளுடைய 'புருஷனை' அழைத்து வரும்படி இயேசு அப்பெண்ணிடம் சொல்லியிருந்தார். நாங்கள் ஆச்சரியப்பட்டபோது, ஒருவரையொருவர் முகத்தில் பார்த்த பார்வை உங்களுக்கு நினைவிருக்கிறதா, அவர் மீது நாங்கள் வைத்திருந்த நம்பிக்கை அனைத்தும், இதோ திடீரென்று கைவிடப்பட்டதை நினைத்து? " "59 ""பின்னர் உடனடியாக அவர் பேசி, 'நீ உண்மையைச் சொன்னாய், ஏனென்றால் உனக்கு ஐந்து புருஷர்கள் இருந்தார்கள், இப்போது உனக்கு இருக்கிறவன் உன்னுடையவன் அல்ல' என்று சொன்னதை நாம் காண்கிறோம். " "60 ""அப்போது அவள் அவரை மேசியா வாக, தேவனுடைய மேசியாவாக அங்கீ கரித்து, அங்கே, 'மேசியா வருகிறார் என்று நாங்கள் அறிவோம். நீர் ஒரு தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும், ஏனென்றால் மேசியா வரும்போது, அவர் இதைச் செய்வார் என்று நாங்கள் அறிவோம்' என்று சொன்னாள். அந்த நகரத்தில் உள்ள சாட்சி, அந்தப் பெண்ணின் சாட்சி நகரத்து மக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது.""" "61 அப்போது வாலிபனாகிய யோவான், ""உங்களுக்குத் தெரியும், அன்று அவர் அப்பத்தைப் பிட்டபோது, அது எனக்கு மெய்யானதாக இருந்தது. இப்போது, நாம் அனைவரும் பசியோடு இருந்தோம், அவர் வனாந்தரத்திற்குச் சென்றிருந்தார், எங்களால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை, அங்கே அவரைச் சந்தித்தோம். திரளான மக்கள் அனைவரும் கூடிவந்தார்கள், முதலில் நமக்குத் தெரியும், 'உணவு வாங்கும்படி அவர்களை ஊருக்கு அனுப்பிவிடுங்கள்' என்று அவர் சொல்வதை நாம் காண்கிறோம். மேலும்-மேலும் 'அவர்களுக்கு உணவு கொடுங்கள்' என்று அவர் நம்மிடம் சொன்னார். அவர் அந்த ஐந்து அப்பங் களையும் இரண்டு சிறிய மீன்களையும் எடுத்து, அந்த அப்பத்தைப் பிட்டார். அவர் மற்றொரு துண்டு அப்பத்தை எடுப்பதற்காகத் தன் கையைத் திரும்பப் பெற்றபோது, அந்த அப்பம் மீண்டும் வளர்ந்திருந்ததை நான் கவனித்தேன். பின்னர் அவர் கையைத் திரும்பப் பெற்று, அதை ஒரு தட்டில் வைத்து, மீண்டும் கையைத் திரும்பப் பெற்றபோது, அந்த மீன் மீண்டும் வளர்ந்திருந்தது. சாதாரண மீன் மட்டுமல்ல, அது சமைக்கப்பட்ட மீனாக இருந்தது, பாருங்கள், ஏற்கனவே மீண்டும் வளர்ந்திருந்தது. " "62 ""சகோதரர்களே, அவர் எப்பேர்ப்பட்ட அணுவை விடுவித்தார், சமைக்கப்பட்ட மீன், சமைக்கப்பட்ட அப்பம், வளர்வதைத் தவிர்த்தார்? அவரே சிருஷ்டிகர் என்று நாம் அறிந்திருந்தோம், ஆனால் இங்கே அவர் ஏற்கனவே சமைக்கப்பட்ட மீனையும் சமைக்கப்பட்ட அப்பத்தையும் சிருஷ்டிக் கிறார்."" " "63 யோவான் இப்படி ஏதாவது சொல்லியிருக்கலாம். அவர் சொன்னார், ""உங்களுக்குத் தெரியும், நான் சிறு பையனாக இருந்தபோது, நாங்கள் எரிகோவுக்குக் கீழே வசித்தோம். என் யூதத் தாய் மதிய வேளையில் என்னை தூங்க வைப்பதற்காக ஆட்டுவார்கள் என்பது எனக்கு நினைவிருக்கிறது; நான் மதியத் தூக்கம் போடுவேன். நான் அவள் கண்களை ஏறெடுத்துப் பார்ப்பேன், அவள் எனக்கு வேதாகமக் கதைகளைச் சொல்வாள்."" " "64 உங்களுக்குத் தெரியும், எந்த ஒரு தாயும் தன் குழந்தைக்குச் செய்வது ஒரு நல்ல விஷயம். ""பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து."" தொலைக் காட்சியை ஆன் செய்து, தொலைக்காட்சியில் வரும் இவற்றைப் பார்ப்பதை விட அது சிறந்ததாக இருக்கும். அவருக்கு ஒரு வேதாகமக் கதையைப் படித்துக் காட்டினால் நீங்கள் நன்றாக இருப்பீர்கள், ஏனென்றால் அது அவருடைய சிறிய மனதை பாதிக்கிறது. " "65 இப்போது, ""அவர் பழகினார்... எலியா தீர்க்கதரிசியின் மூலம் சூனேம் ஊராள் தன் சிறு பையனை மீண்டும் உயிருடன் பெற்றுக்கொண்ட கதையை அவள் எனக்குச் சொல்வாள். எனக்கு அது பிடித்திருந்தது. பின்னர் எங்கள் மக்கள் எகிப்திலிருந்து வெளியேறியதைப் பற்றி அவள் எனக்குச் சொல்வாள். நாங்கள் யோர்தான் நதிக்கரையில் இருந்தோம். அவள் ஆற்றின் மறுபுறத்தைச் சுட்டிக்காட்டி, 'யோவான், அவர்கள் மறுபுறத்தில்தான் முகாமிட்டிருந்தார்கள். அவர்கள் அந்த வனாந்தரத்தில் நாற்பது வருடங்கள் இருந்தார்கள், தேவன் அவர்களுக்கு மன்னாவைப் போஷித்தார். அவர்களுடைய ஆடைகள் ஒருபோதும் பழமையாகவில்லை. தேவன் ஒவ்வொரு காலையும் அவர்களுக்குப் புதிய அப்பத்தைக் கொடுத்தார்' என்று சொல்வாள். " "66 ""என் பிஞ்சு, குழந்தைப் பருவ இருதயம், நான் சொல்வேன், 'அம்மா, தேவனிடம் வானத்தில் நிறைய பெரிய அடுப்புகள் இருக்கிறதா, அவர் இந்த அப்பத்தையெல்லாம் சுட்டு, தமது தூதர்களைக் கொண்டு காலை அப்பத்தைக் கீழே கொண்டுவந்து அதை... வைப்பதற்குத் தயார்படுத்துகிறாரா?' " "67 ""'இல்லை,' அவள் சொல்வாள். 'யோவான், புரிந்துகொள்ள நீ மிகவும் சிறியவன். பார், தேவனிடம் வானத்தில் அடுப்புகள் இல்லை. அவருக்கு அடுப்புகள் தேவையில்லை. நமக்குத்தான் அடுப்புகள் தேவை. ஆனால் தேவனுக்கு அது தேவை யில்லை, ஏனென்றால் அவர் சிருஷ்டிகர். பார், அவர் வெறுமனே பேசுகிறார், அப்பம் வைக்கப்படுகிறது... அவர் சிருஷ்டிகர்.' " "68 ""சகோதரர்களே, இன்று நான் அங்கே நின்று அவர் அந்த அப்பத் துண்டை எடுத்து அதைப் பிய்ப்பதைப் பார்த்தபோது, அவர் மற்றொரு துண்டுக்காகக் கையைத் திரும்பப் பெற்றபோது, அது சிருஷ்டிக்கப்பட்டது, நாம் ஒரு கள்ளத் தீர்க்கதரிசியைப் பின்பற்ற வில்லை என்பதை நான் அறிந்துகொண்டேன். அது மனுஷனில் இருந்த சிருஷ்டிகர் தாமே."" மேலும் அந்த... " 69 பிறகு அவர்கள் சில மக்களின் மனநிலையைப் பற்றி விவாதித்திருக்கலாம்; சிலர் நம்பினார்கள், சிலர் நம்பவில்லை; பின்னர் மக்கள் மீதான அவருடைய மனநிலை. 70 இப்போது, உங்களுக்குத் தெரியும், இந்தக் கடைசி நாட்களில் கிறிஸ்தவம் மிகவும் மாறிவிட்டது. இப்போது நீங்கள் ஒரு நபரைத் தாலாட்ட வேண்டும், நிறைய வாக்குறுதி அளிக்க வேண்டும், அவர்கள் விசுவாசிப்பதற்கும், சபைக்கு வருவதற்கும் அவர்களுக்கு நிறைய கொடுக்க வேண்டும், மேலும் அவர்களுக்குச் சிறந்த கூட்டாளிகள் மற்றும் எல்லாமே கிடைக்கும் என்று வாக்குறுதி அளிக்க வேண்டும். அது கிறிஸ்தவம் அல்ல. 71 கிறிஸ்தவம் தாலாட்டப்படுவது அல்ல. கிறிஸ்தவம் கரடுமுரடானது. சரி. அது ஒரு-அது ஒரு... கிறிஸ்தவம் ஒரு வெப்பப் பண்ணை செடி (hotbed plant) அல்ல. 72 ஒரு வெப்பப் பண்ணை செடி என்பது பெரும்பாலும் கலப்பினச் செடியாகும். நீங்கள் எப்போதும் அதன் மீது மருந்து தெளிக்க வேண்டும், பூச்சிகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அது அதன் பலவீனத்தின் காரணமாகத்தான். அப்படித் தான் நீங்கள் பல கிறிஸ்தவர்களையும் செய்ய வேண்டியிருக்கிறது, நிறைய வாக்குறுதி களைக் கொண்டு அவர்கள் மீது ஒரு விதமாகத் தெளிக்க வேண்டியிருக்கிறது. 73 நீங்கள், உங்களுக்கு அது தேவையில்லை. ஒரு உண்மையான ஆரோக் கியமான செடிக்கு எந்தத் தெளிப்பும் தேவையில்லை. பூச்சிகள் அதை விட்டு விலகியே இருக்கும். "74 இன்று மனிதன் காரியங்களை எடுத்து அவற்றைப் புரட்ட முயற்சிப்பது போலவே இதுவும் இருக்கிறது. தேவன், துவக்கத்தில், ""விதையானது அதினதின் ஜாதியின்படியே பிறப்பிக்கக்கடவது"" என்று சொன்னார். " 75 நான் இங்கே ரீடர்ஸ் டைஜஸ்டில் (Reader's Digest) படித்துக்கொண்டிருந்தேன், அவர்கள்-அவர்கள் நாம் கலப்பினச் சோளம் என்று அழைப்பதை எடுக்கிறார்கள், அது ஒரு அழகான கதிரை உருவாக்குகிறது, நிச்சயமாக, பெரிய நல்ல கதிர்; ஆனால் அது பயனற்றது, அதில் ஒன்றுமில்லை. அவர்கள் ஒரு சிறந்த தக்காளியை உருவாக்குகிறார்கள், அது தக்காளி சுவையே இல்லை, மேலும், இப்போது இறக்கைகள் கூட இல்லாத கோழி இருக்கிறது. கலப்பினம் (Hybreeding)! பார்த்தீர்களா? 76 இப்போது, நினைவில் கொள்ளுங்கள், உங்களிடம் கலப்பினச் சோளம் இருக்கலாம், ஆனால் நீங்கள் அந்த விதையை மீண்டும் விதைக்க முடியாது. அது மீண்டும் உற்பத்தி செய்யாது. அது மரித்துவிடும். ஏன்? அதில் உயிர் இல்லை. ஒவ்வொரு முறையும் நீங்கள் அதை ஒட்டுரகமாக உருவாக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், அது தொடர்ந்து பெருகிக்கொண்டே இருக்கும். மனிதனின் கருத்துக்களின்படி பரிணாமக் கொள்கை தவறு என்பதை அது காட்டுகிறது. 77 நீங்கள் ஒரு-ஒரு பெண் குதிரையையும் ஒரு கழுதையையும் எடுத்து, அவற்றை ஒன்றாக இனப்பெருக்கம் செய்து ஒரு கோவேறு கழுதையைப் பெறலாம், ஆனால் ஒரு கோவேறு கழுதையால் மீண்டும் தன்னை இனப்பெருக்கம் செய்ய முடியாது. அது முடிந்தது. அவ்வளவுதான். அவன் முடிந்து விட்டான். "78 சோளம் மற்றும் கோதுமை மற்றும் அவர்கள் கலப்பினம் செய்யும் பொருட் களைப் போன்ற இந்தக் கலப்பின உணவுகளை உண்பதிலிருந்து இந்த மக்களைத் தடுக்காவிட்டால், இன்னும் இருபது ஆண்டுகளில், ""அது பெண்களின் உடலமைப்பை மாற்றுகிறது. இனி இருபது ஆண்டுகளில் அவர்களால் குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியாது. அது தலை முறையைக் கொன்றுகொண்டிருக்கிறது"" என்று இப்போது சொல்கிறார்கள். அதில் சத்து இல்லை." 79 மனிதன் முன்பு இருந்தது போல் உருவாக்கப்படவில்லை. இன்று மனிதனைப் பாருங்கள். ஏன், அவர்கள், முன்பு, பந்து விளையாட்டுகள் கடினமானதாக இருந்தன. இப்போது அவர்கள் தலைக்கவசங்களை அணிய வேண்டியிருக்கிறது; அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு டஜன் பேரை கொல்கிறார்கள், கினிக்கோழி (guinea) போல தலையில் அடித்து, அவன் இப்போதே சாகிறான்; சண்டைகள் மற்றும் அனைத்தும். மனிதன் ஒரு குப்பை மேட்டிலிருந்து உருவாக்கப்பட்டிருக்கிறான். இது, மற்றும் இது கலப்பினப் பொருட்களின் காரணமாக, இது நம் வாழ்வின் முழு அமைப்பையும், நமது முழுப் பொருளாதாரத்தையும் மாசுபடுத்திவிட்டது. "80 மேலும்-மேலும்-மேலும் அந்தக் கலப்பினம் சபைக்கும் வந்துவிட்டது. உண்மையான கரடுமுரடான வேதாகம விசுவாசிகள் கூட்டத்தைக் கொண்டிருப் பதற்குப் பதிலாக, அவர்கள் அதைச் சபைப் பிரிவுகளால் கலப்பினமாக்கிவிட்டார்கள். அவர்கள், ""என்னிடம் இது இருக்கிறது, என்னிடம் அது இருக்கிறது; நான் இதில் இருக்கிறேன், நான் அதில் இருக்கிறேன்"" என்று இருக்க வேண்டியிருக்கிறது. இது கலப்பினம், அந்தக் காரியத்தால் தன்னை மீண்டும் உற்பத்தி செய்ய முடியாது." 81 நமக்கு மீண்டும் ஒரு அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகம் தேவை. ஆனால் நீங்கள் அதைச் செய்வதற்கான ஒரே வழி, மீண்டும் வேதாகமத்திற்குத் திரும்புவதும், இந்தச் சில கலப்பின மதங்களிலிருந்து விலகிச் செல்வதும்தான். "82 கலப்பினமாக்குதல், குழந்தையைப் போலத் தாலாட்டப்பட வேண்டியிருக்கிறது! விசுவாசம் இல்லை! வெறும் பவுடர் பூச்சுகளின் கூட்டம், சும்மா மென்மை யானவர்கள் (sissified), அதற்குள் தாலாட்டப் பட்டவர்கள். ""நான்..."" நீங்கள் ஒரு கிறிஸ்தவரா என்று நான் கேட்கிறேன்? ""நான் மெத்தடிஸ்ட்."" நீங்கள் ஒரு கிறிஸ்தவரா? ""நான் பிரஸ்பிடீரியன். நான் பெந்தேகோஸ்தே."" தேவனுக்கு முன்பாக அதற்கு எந்த அர்த்தமும் இல்லை. [சகோதரர் பிரான்ஹாம் விரல்களைச் சொடுக்கினார்]" 83 கிறிஸ்துவின் ஆவியிலே பிறந்து, தேவனுடைய வார்த்தை உங்களுக்குள் வாழ்வதினாலே நீங்கள் ஒரு கிறிஸ்தவராயிருக்கிறீர்கள். "84 உங்களுக்குத் தெரியும், நான் எப்போதும் ஒரு உயர்தர இன (high-bred) குதிரையை ரசிக்கிறேன். உங்களுக்குத் தெரியும், அதற்கு அறிவு இருக்கிறது. நீங்கள்-நீங்கள் அதற்குப் போதிக்கலாம், அதற்காகச் சில காரியங்களைச் செய்யலாம், அது கற்றுக்கொள்ளும். ஆனால் நீங்கள் ஒரு பழைய கோவேறு கழுதையை எடுத்தால், உங்களால் அதற்கு ஒன்றும் செய்ய முடியாது. அது சும்மா ஒரு பெரிய பழைய நீண்ட காதுள்ள கழுதை. அது அங்கே உட்கார்ந்திருக்கும், நீங்கள் அதனிடம் பேசலாம், அது தன் காதுகளை வெளியே நீட்டிக்கொண்டு, ""ஹா? ஹா? ஹா?"" என்று இருக்கும். பாருங்கள், அது, அது ஒரு கலப்பினம்." "85 இது, கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இந்த அநேகரை எனக்கு நினைப்பூட்டுகிறது, கலப்பினம், கழுதை மதம். இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்று நீங்கள் அவர்களிடம் சொல்லுங்கள்; ""நான் அதை நம்பவில்லை"" என்று சொல்வார்கள். பாருங்கள்? ஆகையால் உங்களால் ஒரு போதும் அவருக்கு எதையும் போதிக்க முடியாது. அவருக்கு நீங்கள் எப்படிப் போதிக்க முடியும்; எப்படியிருந்தாலும் அவர் போய்விட்டார். ""என் சபை இப்படித்தான் நம்புகிறது. என்னுடையது அப்படி நம்புகிறது."" ஆனால் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்று தேவனுடைய வார்த்தை சொல்லுகிறது! ஒரு கலப்பினக் கிறிஸ்தவனை எனக்குப் பிடிக்காது. " 86 நான் ஒரு-ஒரு வம்சாவளி (pedigreed) குதிரையை விரும்புகிறேன். அதற்குத் தன் அப்பா யார், தன் அம்மா யார், தன் தாத்தா மற்றும் பாட்டி யார் என்பது தெரியும். அதற்கு வழிவழியாக வந்த தலைமுறைகள் அனைத்தும் தெரியும். 87 ஒரு வம்சாவளி கிறிஸ்தவனும் அப்படியே இருக்கிறான், தன் பிதா யார் என்பதை அவன் அறிந்திருக்கிறான். அவன் தேவனிடமிருந்து வந்தான்; அவன் தேவனுடைய வார்த்தையாயிருக்கிறான், அவர் எப்போதுமிருந்தது போலவே இவனும் இருக்கிறான். அவன் தேவனுடைய உண்மையான வம்சாவளிப் படைப்பு, தேவனுடைய வார்த்தை அவனுக்குள் இருக்கிறது, இயேசு கிறிஸ்து தம்மைத் தாமே வெளிப்படுத்துகிறார். "88 அவிசுவாசிகளின் கூட்டம்! இயேசு ஒரு நாள் ஒட்டுண்ணிகளின் கூட்டத்தை உதறித் தள்ள விரும்பினார், அநேகர் அவரைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தார்கள். அவரிடம் அவருடைய சீஷர்கள் இருந்தார்கள். பின்னர், எழுபது பேர் இருந்தார்கள், அதாவது ஊழியர்கள் சங்கம். பின்னர், ஆயிரக்கணக்கானோர் அடங்கிய சபைக் கூட்டம் இருந்தது. அப்போது அவர் இந்த அறிக்கையை வெளியிட்டார், ""நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசித்து, அவருடைய இரத்தத்தைப் பானம் பண்ணினாலொழிய, உங்களுக்குள்ளே ஜீவன் இல்லை"" என்று அவர் சொன்னார். " "89 இப்போது அந்தக் கூட்டத்தில் அமர்ந்திருக்கும் ஒரு மருத்துவர் என்ன சொல்வார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? ஒரு புத்திசாலித்தனமான சிந்தனையுள்ள மனிதர், நாம் புத்திசாலித்தனமான சிந்தனை என்று அழைப்பவர் என்ன நினைப்பார்? அவர் அதை ஒருபோதும் விளக்கவில்லை. அவர் அதை விளக்க வேண்டியதில்லை. ஏன், அந்த மருத்துவர், ""அந்த ஆளிடமிருந்து விலகிச் செல்லுங்கள். அவர் பைத்தியம். அவர்... நாம் மனித இரத்தக்காட்டேரிகள் (human vampires) போல இருப்போம். ஒரு மனிதனுடைய இரத்தத்தைக் குடித்து, அவருடைய மாம்சத்தைத் தின்பதா?"" என்று சொல்வார்." "90 அப்போது அந்தக் கூட்டம், ""இதுதான் நேரம். இங்கேதான் நாம் வருகிறோம். நாம் வெளியேறுவோம்! இனி ஒருபோதும் கூட்டங்களில் எதற்கும் கலந்துகொள்ள மாட்டோம்"" என்று ஆசாரியர் சொன்னார் என்று நான் கற்பனை செய்கிறேன். அவர்கள் போய்விட்டார்கள். பின்னர், அவர் அவர்கள் அனைவரையும் தம்மை விட்டுப் போகச் செய்தார். " "91 பின்னர் அவர் திரும்பிப் பார்த்து அந்த எழுபது பேரிடம், ""மனுஷகுமாரன் தாம் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப்போவதை நீங்கள் காண்பீர்களானால் என்ன சொல்லுவீர்கள்?"" என்று கேட்டார். " "92 இப்போது, அந்த எழுபது பேர், ""மனுஷகுமாரன் தாம் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப்போவதா? ஏன், அவர் பிறந்த அதே முன்னணையில் எங்களை வைத்திருந்தார். அவருடைய தாயை நாங்கள் அறிவோம். அவர் சுற்றப்பட்டிருந்த துணிகளை, பிள்ளைச்சீலையை நாங்கள் பார்த்தோம். அவர் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் பிறந்தார். அவர் இங்கே நாசரேத்தில் வளர்க்கப்பட்டார். அங்கே அவருடைய சகோதரர்கள், அவருடைய சகோதரிகள் மற்றும் அவர்கள் அனைவரும் நம்முடன் இருக்கிறார்கள். அப்படியிருக்க, 'இந்த மனுஷகுமாரன் மேலே ஏறிப்போனார்' என்று அவர் சொல்கிறாரே?"" என்று சொன்னார்கள். இப்போது, அவர் அதை விளக்கவில்லை, அவர் அதைச் சொன்னார். இப்போது, அவர்களால் அதை விளக்க முடியவில்லை, அதைத் தங்கள் மனதில் சரியாக்க முடியவில்லை. ""சரி,"" அவர்கள், ""இங்கேதான் நாம் வருகிறோம்,"" என்று சொல்லிவிட்டு வெளியேறிச் சென்றார்கள். அவர்களால் அவ்வளவுதான் தாங்க முடிந்தது. " 93 அவர்களிடம் இன்னும் அதே குழுக்கள் உள்ளன. அது சரி. நம்மிடமும் அவர்கள் இருக்கிறார்கள். நாம் கவனிக்கிறோம். "94 பின்னர் அவர் திரும்பினார். நினைவில் கொள்ளுங்கள், அந்தச் சீஷர்களாலும் அதை விளக்க முடியவில்லை, ஆனால் அவர்களுக்கு விசுவாசம் இருந்தது. பின்னர் இயேசு திரும்பிப் பார்த்து அந்தப் பன்னிரண்டு பேரிடம், ""நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களா?"" என்று கேட்டார். " "95 அப்போது பேதுரு அந்த முக்கியமான வார்த்தைகளைச் சொன்னார்: ""ஆண்டவரே, யாரிடத்தில் போவோம்? நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே; நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம்."" பார்த்தீர்களா? அவருடைய மாம்சத்தை எப்படிப் புசிப்பது மற்றும் அவருடைய இரத்தத்தை எப்படிக் குடிப்பது என்று அவர்களால் விளக்க முடியவில்லை. அவர் பெத்லகேமில் பிறந்திருக்கும்போது, அவர் எங்கிருந்து கீழே வந்தாரோ, அங்கே எப்படி மேலே ஏறிப்போவார் என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்களால் முடியவில்லை. ஆனால், பாருங்கள், விசுவாசத்திற்குத் தோல்வி என்பது தெரியாது. அது நங்கூரமிடப்பட்டிருக்கிறது. யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை, அது அங்கேயே இருக்கிறது. அது அங்கேயே இருந்தது. அவர்கள் இந்த ஜீவனுக்காக நியமிக்கப் பட்டிருந்தார்கள். மேலும் அவர்... அவர்கள் அங்கேயே இருந்தார்கள்." "96 இப்போது அந்த வித்தியாசமான வகைகள். சிலர் நம்பினார்கள். சிலர், ""ஒருவனும் இப்படிப் பேசினதில்லை"" என்றார்கள். சிலர் நம்பவில்லை, அவர்கள், ""ஓ, அது, அதைப் பற்றி விவாதித் திருக்கலாம்"" என்றார்கள். " "97 சிலர், ""ஒருவனும் இந்த மனிதனைப் போலப் பேசினதில்லை. இவரிடம் ஏதோ விசித்திரமான ஒன்று இருக்கிறது. அவர் சொல்வதை, அவரால் ஆதரிக்க முடிகிறது"" என்றார்கள். சரி, அவர்கள் அதைச் சொன்னார்கள், உங்களுக்குத் தெரியும், ""அவர் ஒரு ஆசாரியரைப் போலப் பேசுவதில்லை. அவர் ஒரு ரபியைப் போலப் பேசுவதில்லை. ஏனென்றால் அவர் சொல்வதை, தேவன் ஆதரிக்கிறார், அவர் சொன்னதை தேவன் மெய்ப்பிக்கிறார்"" என்றார்கள். ஓ, என்னே!" "98 அப்போது வாலிபனாகிய யோவான், ""இதை நினைத்துப்பாருங்கள்! இப்போது அவரை நம்முடன் வைத்திருக்கிறோம். அது எவ்வளவு பெரிய ஆறுதலாக இருக்க வேண்டும்! என்ன ஒரு பாதுகாப்பு!"" என்று சொல்லியிருக்க வேண்டும். அது நமக்கு எவ்வளவு பெரிய பாதுகாப்பாக இருக்க வேண்டும்!" 99 நான் ஒரு மிஷனரி, உலகம் முழுவதும் சுற்றியிருக்கிறேன். எல்லா வகையான மதங்களையும், அஞ்ஞானிகளின் தெய்வங்கள் என்று அவர்கள் வைத்திருக்கும் எல்லா வகையான தெய்வங்களையும் நான் பார்த்திருக்கிறேன்; முகமதியர், புத்தர், மற்றும் சீக்கியர், சமணர், ஓ, இன்னும் எவ்வளவோ, மற்றும் பழங்குடியினரின் அஞ்ஞானத் தெய்வங்கள். ஆனால், அவர்கள் ஒவ்வொருவரிலும், கிறிஸ்தவத்தைத் தவிர அவர்களில் எதுவும் சரியானது அல்ல. அவர்கள் ஒவ்வொருவரிலும், அவர்களுடைய ஸ்தாபகர்கள் இறந்துவிட்டார்கள், அவர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை அவர்களிடம் உள்ளது. ஆனால் கிறிஸ்தவம் ஒன்று மட்டுமே சரியானது, ஏனென்றால் நமது ஸ்தாபகர் மரித்தார், அடக்கம் செய்யப்பட்டார், ஆனால் உயிர்த்தெழுந்தார், அவர் உயிருடன் இருக்கிறார் என்பதை நம்மால் நிரூபிக்க முடியும். 100 முகமதுவின் கல்லறையில், ஏறக்குறைய கடந்த இரண்டாயிரம் ஆண்டு களாக, ஒரு வெள்ளைக் குதிரை இருக்கிறது, முகமது மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து, உலகம் முழுவதும் சவாரி செய்து அதை வெல்வார் என்று காத்துக்கொண்டு, அத்தனை மணி நேரத்திற்கு ஒருமுறை காவலர்களை மாற்றுகிறார்கள். 101 ஆனால் இயேசு ஏற்கனவே மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்துவிட்டார், இரண்டாயிரம் ஆண்டுகளாக உயிரோடு இருக்கிறார், இன்றிரவு நம்முடன் இருக்கி றார். பின்பு நாம் இருளைப் பார்க்கும்போது, இப்போது இருப்பது போல காலத்தின் முடிவைப் பார்க்கும்போது, நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நேரங்களுக்கு வரும்போது, வாழ்க்கையின் சீரிய கடலில் நாம் பயணம் செய்துகொண்டிருக்கும்போது, புயல் வீசும் கடல்களும்-கப்பலும் எந்த நேரத்திலும் சேதமடையலாம், இந்தச் சிறிய விளக்குகள் அப்படி சட்டென்று அணைந்துபோகலாம். [சகோதரர் பிரான்ஹாம் விரல்களைச் சொடுக்கினார்] அல்லது, இன்றிரவு நாம் ஒருவரும் இந்தக் கட்டிடத்தை விட்டு வெளியேறாமல் போகலாம். மரணம் எந்த நேரத்தில் வரும் என்று நமக்குத் தெரியாது. 102 அந்த நபராயிருப்பதற்குத் தம்மை முழுமையாக அடையாளம் காட்டின சிருஷ்டிகர் தாமே, தங்களுடன் பயணம் செய்கிறார் என்பதை அறிவது, அந்தச் சீஷர்களுக்கு எப்பேர்ப்பட்ட பாதுகாப்பு உணர்வை அளித்திருக்க வேண்டும். 103 உலக வரலாற்றின் முடிவிலுள்ள இந்த இருண்ட வேளையில், சிருஷ்டிகர் வாழ்க்கையின் சீரிய கடலில் நம்முடன் பயணம் செய்கிறார், பாதுகாப்பாக உள்ளே வைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அறிவது எப்பேர்ப்பட்ட ஆசீர்வதிக்கப்பட்ட சிந்த னையாக இருக்கிறது, எப்பேர்ப்பட்ட ஆசீர்வ திக்கப்பட்ட நம்பிக்கையாக இருக்கிறது, எப்பேர்ப்பட்ட நிச்சயத் தன்மையாக இருக்கிறது! குண்டுகள், எது வந்தாலும் சரி, அவை சவாரி செய்யட்டும், வெடிக்கட்டும், வீசட்டும், அவை எதை வேண்டுமானாலும் செய்யட்டும், எனக்கு அது ஒரு பொருட் டல்ல, நான் சிருஷ்டிகருடன் பயணம் செய்கிறேன். இந்தத் தண்ணீர்களில் பயணம் செய்யும்போது எப்பேர்ப்பட்ட பாதுகாப்பு! 104 இப்போது அவரைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் எவ்வளவு பெரிய காரியங்களைச் செய்தார் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். எழுப்புதல் விருந்துக்குப் பிறகு, நான் சொன்னது போல், எழுப்புதல்களுக்கு இடையில் இருப்பது போல இயேசு அநேகமாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். மேலும் நாம்... அவர் யார் என்பது அவர்களுக்குத் தெளிவாக அடையாளம் காட்டப்பட்டிருந்தது. அவர் யாரைக் குருடாக்கிக் கொண்டிருந்தாரோ அந்த மக்களுக்கு, அவர் யார் என்பது தெரிந்திருந்தது. ஆனால் வேதத்தைப் பற்றிக்கொண்டிருந்தவர்களுக்கு, வேதம்... தேவனுடைய வார்த்தை கொடுக்கப் பட்டிருக்கிறது என்றும், ஒவ்வொரு தலை முறைக்கும் நிறைய கொடுக்கப் பட்டி ருக்கிறது என்றும், அந்தக் காலத்திற்கான வாக்குத்தத்தம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர்கள் அறிந்திருந்தார்கள். மேலும் மேசியாவின் காலத்தில் என்ன செய்யப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டதோ அதை அவர் சரியாக நிறைவேற்றினார். அவர் ஒவ்வொரு தகுதியையும் சந்தித்தார். பின்பு நாம்... அவர்தான் அந்த மனிதர் என்று அவர் நிச்சயிக்கப்பட்டார். 105 ஆனால், பாருங்கள், அவர் மிகவும் சாதாரணமாக இருந்தார். அவர் ஒரு ஆசாரியரைப் போல உடை அணியவில்லை. அவரிடம், இல்லை, நாம் கல்வி என்று அழைப்பது போன்ற கல்வி அவருக்கு இல்லை. அவர் பள்ளிக்குச் சென்றதற்கான பதிவு கூட நம்மிடம் இல்லை. ஆனால் அவரிடம் வித்தியாசமான ஏதோ ஒன்று இருந்தது. "106 அவர்களால் புரிந்துகொள்ள முடியாத போது, அவர் அவர்களை அழைத்தார், ""வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக் குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. நான் யார் என்று அவை உங்களுக்குச் சொல்கின்றன"" என்றார். " 107 இப்போது, நினைவில் கொள் ளுங்கள், அவர்கள் அனைவரும் இதைத் தங்கள் இருதயத்தில் கொண்டிருந்தார்கள், இந்தக் காரியங்களைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். கடலில் பயணம் செய்யும்போது, அவர் படகில் அவர்களுடன் இருக்கும் வரை, அவர்களால் எப்படிக் குழந்தைகளைப் போல இருக்க முடிந்தது. 108 இப்போது, நண்பரே, அது நமக்கு என்ன செய்ய வேண்டும்! அதே அடையாளம் காணப்பட்ட இயேசு கிறிஸ்து, அதே சிருஷ்டிகர், அதே தேவன், இன்றிரவு நம்முடன் இருக்கிறார். அவருடைய பிரசன்னம் இங்கே இருக்கிறது என்பதை அறிவது எவ்வளவு பாதுகாப்பானது-அது எவ்வளவு பாதுகாப்பானது, என்ன ஒரு உணர்வு. 109 இப்போது நாம் காண்கிறோம், அவர்கள் அந்தப் பெரிய நேரத்தைக் கொண்டிருந்தபோதே, திடீரென்று பிரச்சனை எழுந்தது. கப்பல் ஆடியது, பாய்கள் பிய்ந்து போயின, தண்ணீர் படகில் நிரம்பியது. பிழைப்பதற்கான நம்பிக்கைகள் அனைத்தும் போய்விட்டன. 110 இப்போது, அது விசித்திரமாக இல்லையா, நாம் இப்போது முடிவுக்கு வந்து கொண்டிருப்பது போலவே, அது விசித்திரமாக இல்லையா? அவர் எவ்வளவு பெரியவர் என்று நம்மால் பேச முடியும்; நாம் சாட்சி சொல்லும்போது நம்முடைய சபையில் அவர் எவ்வளவு பெரியவர் என்று சொல்ல முடியும்; அவர் எவ்வளவு பெரியவர் என்று நம்முடைய-நம்முடைய பணியாளர் களிடமும், முதலாளிகளிடமும் சொல்லுகி றோம்; அவர் எவ்வளவு பெரியவர் என்று தெருவில் உள்ள மக்களிடம் சொல்கிறோம்; ஆனால் பிரச்சனை தாக்கும்போது, நாம் பதற்றமடைகிறோம். பாருங்கள்? நாம் சும்மா... பாருங்கள்? அவர் செய்வதை நாம் பார்த்த காரியங்கள், அவர் செய்கிறார் என்று நமக்குத் தெரிந்த காரியங்கள்; ஆனால் ஒரு சிறிய வியாதியோ, அல்லது ஒரு சிறிய பிரச்சனையோ வீட்டில் தாக்கட்டும், என்ன நடக்கிறது என்று பாருங்கள்; எல்லாம் சுக்குநூறாகிப்போகிறது, எல்லா-எல்லா நம்பிக்கைகளும் போய்விடுகிறது. 111 அவர் எவ்வளவோ காரியங்களைச் செய்வதை அவர்கள் பார்த்திருந்த போதிலும்; பிரச்சனை தாக்கும்போது அனைத்தும் மறக்கப்படுகின்றன. 112 இப்போது போல, நாம் இந்தப் பெரிய எழுப்புதலைப் பார்த்திருக்கிறோம், மற்ற பெரிய எழுப்புதல்களின் வரலாறு நம்மிடம் உள்ளது, அவருடைய பிரசன்னம் நம்மிடம் உள்ளது, இந்தக் காரியங்களை நாம் அறிவோம், சில சமயங்களில் நம்மால் சரிசெய்ய முடியாத பிரச்சனை உள்ளே வருகிறது. அவர்கள்... 113 உதாரணமாக இப்போது போல, இப்போது நம் சபைகளில் நமக்குப் பிரச்சனை இருக்கிறது. நமக்குச் சபைப் பிரிவு பிரச்சனைகள் உள்ளன, நம் சபைகளில் வாக்குவாதங்கள் உள்ளன. என்ன நடக்கப்போகிறது என்று நமக்குத் தெரியாது. அங்கே ஒரு பெரிய விஷயம் உருவாவதை நாம் காண்கிறோம். வேதாகமத்தை விசுவாசிக்கிற நம்மில் எவருக்கும், ஏதோ ஒன்று நடக்கப்போகிறது என்பது தெரியாமல் இல்லை. அது தெரியாதவர்கள் யாரும் இல்லை. 114 எல்லா சபைகளும் சபைகளின் எக்குமெனிக்கல் கவுன்சிலுக்குள் (Ecumenical Council of Churches) கொண்டுவரப்படப் போகின்றன. பின்னர், நீங்கள் அப்படிச் செய்யும்போது, வேதாகமத்தின் உங்கள் பெரிய சுவிசேஷப் போதனையை நீங்கள் இழக்கப் போகிறீர்கள். பெந்தேகோஸ் தேக்காரர்கள் அனுதாபம் காட்டுகிறார்கள், ஒரு பன்றி வெட்டுவதற்குக் கொண்டு போகப்படுவது போல, அது சரி, எக்குமெனிக்கல் கவுன்சிலுக்குள் நேரடியாகச் செல்கிறார்கள். பல பெரிய பெந்தேகோஸ்தே தலைவர்கள் அவர்களுடன் உடன்படு கிறார்கள். நான் உங்களுக்குச் சொல்கிறேன், அது போன்ற ஒரு விஷயத்தில் உங்கள் கழுத்தை ஒருபோதும் நுழைக்காதீர்கள். அதுதான் சம்பவிக்கும் என்று வேதம் சரியாகச் சொன்னது. மிருகமும் முத்திரையும் இருக்கிறது, மேலும், மிகச் சரியாக, அனைத்தும் சரியான வரிசையில் அமைக்கப் பட்டுள்ளன. நாம் இதைப் பார்க்கிறோம், இதன் விளைவு என்னவாக இருக்கும் என்று ஆச்சரியப்படுகிறோம். "115 பிரச்சனை வந்தது. அவர்கள் யாரைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்களோ அவரே, அந்தச் சிருஷ்டிகரே படகில் தங்களோடு இருந்தார் என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள். இப்போது நீங்கள், ""நான் அப்படி நினைக்க முடிந்தால்!"" என்று சொல்கிறீர்கள்." "116 சரி, நினைவில் கொள்ளுங்கள், நாம் இன்னும் அவரை வைத்திருக்கிறோம், ஏனென்றால் அவர் எப்போதும் வார்த்தையாக இருக்கிறார். யோவான் 1:1-ல், நேற்றிரவு நாம் பேசியது போல, ""அவர் வார்த்தை யாயிருந்தார்; அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம்பண்ணினார்."" இந்த நாளுக்கான அவருடைய சிந்தனைகளுக்கும் அவருடைய செயல்களுக்கும் நம்மை வழிநடத்தும் அவருடைய வார்த்தையை நாம் இன்னும் வைத்திருக்கிறோம். பாருங்கள்? அந்த... மோசேயின் காலத்தில் அவருக்கு இருந்த சிந்தனைகள் அல்ல, சீஷர்களின் சிந்தனைகள் அல்ல, லூத்தர், அல்லது வெஸ்லி, அல்லது பெந்தேகோஸ்தே காலம், அல்லது அவற்றில் எவற்றின் சிந்தனைகளும் அல்ல. இப்போது என்ன நடக்கப்போகிறது என்பதை நமக்குச் சொல்லும் வேதாகமம் இங்கே நம்மிடம் உள்ளது. பாருங்கள்? வேதாகமத்தில் பெந்தேகோஸ்தே எழுப்புத லையும், லூத்தரன் மற்றும் அந்தச் சபைக்காலங்கள் அனைத்தையும் நாம் காண்கிறோம். அவற்றை நாம் பார்த்தோம். ஆனால் இப்போது அது என்னவாக இருக்கும் என்று நமக்குச் சொல்லும் வேதமும் இங்கே நம்மிடம் உள்ளது. அதுதான் தேவன், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் காலத்திற்குத் தேவன் தமது சொந்த வார்த்தையைத் தாமே வியாக்கியானப்படுத்துகிறார். அவரே தமது சொந்த வியாக்கியானகர்த்தா. இருந்த போதிலும், நாம் பதற்றமடைகிறோம். பதற்றமடையாதீர்கள். " 117 அவருடைய சீஷர்கள் சில சமயங்களில், மருத்துவர்களால் முடியாது, அதைக் குறித்து என்ன செய்வது என்று தெரியாது என்கிற, வியாதி, புற்றுநோய் மற்றும் பல போன்ற, அவர்களால் சரிசெய்ய முடியாத சரீரப் பிரச்சனைகளுக்குள் சிக்குகிறார்கள். அவர்களைப் போலவே நாமும், கப்பலில் யார் இருக்கிறார் என்பதை மறந்துவிடுகிறோம். 118 அவர் இந்தக் காரியங்கள் அனைத்தையும் அறிந்திருந்தார் என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும். அவை நடக்கப்போகின்றன என்பதை அவர் அறிந்திருந்தார். அவர்... அவர் எல்லாவற்றையும் அறிந்திருந்தார், எனவே இது நடக்கப்போகிறது என்பதை அவர் அறிந்திருந்தார். அது அவர்களுக்கு நடக்கப்போகிறது. அவர் ஏன் அதை நடக்கவிட்டார்? அவர் அந்தப் படகில் ஏறியபோது, அது நடக்கப்போகிறது என்பதை அவர் அறிந்திருந்தார். 119 நாம் இந்த நிலையைச் சந்திக்க வேண்டியிருந்தது என்பதை அவர் அறிவார், அது அப்படித்தான் இருக்கும் என்று அவர் இங்கே வேதாகமத்தில் நமக்கு முன்னறிவித் திருக்கிறார். இப்போது அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? அவர்களுடைய விசுவாசத் தைச் சோதித்துக்கொண்டிருந்தார். 120 அதுபோல, ஒரு-ஒரு-ஒரு நல்ல, சிறிய, தாயைப் போன்ற பெண்மணி சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்க அவர் ஏன் அனுமதிப்பார்? இங்கே ஒரு நல்ல வாலிபப் பையன்களை, இந்தச் சக்கர நாற்காலிகளில் அமர்ந்திருக்கும் இந்த வாலிபர்களை, பெண்களை, மற்றும் பலரை அவர் ஏன் அனுமதிப்பார்? அவர் ஏன் அனுமதிப்பார்? இன்னும், அவர்கள் முடமாக இருக்கலாம், ஒரு சாதாரண வாழ்க்கையை வாழலாம். ஆனால் இங்கே சிலர் இருதயக் கோளாறுடன் அமர்ந்திருக்கலாம், தேவன் உங்களைச் சுகமாக்கா விட்டால், நீங்கள் விடியற் காலைக்கு முன்பே மரித்துப்போகலாம். அது சரி. அது நடக்கப்போகிறது என்பதை அவர் அறிந்திருந்தார். ஒருவேளை நம்முடைய விசுவாசத்திற்கு ஒரு சோதனையைக் கொடுப்பதற்காக அது செய்யப் பட்டிருக் கலாம். அதனால்தான் அது அவர்களுக்குச் செய்யப்பட்டது. அவர் அப்படிச் சொன்னார். பாருங்கள்? இப்போதும் அதேதான். 121 வரவிருந்த அபிஷேகம் பண்ணப் பட்ட, நிரூபிக்கப்பட்ட மேசியா அவர்தான் என்பதை, அவர்களுக்குள்ளே அவர் நிரூபித்த வார்த்தைகளினாலும் அடையாளங்களினா லும், அவர் யார் என்பதை அவர் நிரூபித்திருந்தார். 122 பரிசுத்த ஆவியின் ஸ்நானத்தினாலும், அவர் செய்வேன் என்று இந்நாளில் வாக்குத்தத்தம் செய்த காரியங்களின் வருகை யினாலும், அவர் நம் மத்தியில் நிரூபிக்கப் பட்டிருக்கிறார். அவர் இங்கே இருக்கிறார் என்பதை அவர் நிரூபித்திருக்கிறார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்பதை அவர் நிரூபிக்கிறார். ஏதோ ஒரு சிறிய விஷயத்தில் நாம் எவ்வளவு எளிதாகப் பதற்றமடைய முடியும் என்பதைப் பாருங்கள்? அது நடக்க நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. இல்லை. "123 அவர், ""என்னைக்குறித்து எழுதி யிருக்கிற கிரியைகளை நான் செய்யாம லிருந்தால், என்னை விசுவாசிக்காதிருங்கள்"" என்றார். சபை, பரிசுத்த ஆவியானவர் இன்று, இந்த வேளைக்காகச் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்யவில்லை என்றால், இந்தச் செய்தியை நம்பாதீர்கள்; அதை நம்பாதிருக்க உங்களுக்கு உரிமை உண்டு." "124 ஆனால் அவர் இப்போது செய்துகொண்டிருக்கும் இந்தக் காரியங்கள் இந்த நேரத்தில் சரியாக நடைபெறும் என்று அவர் வாக்குத்தத்தம் செய்தார். எனவே, ""நான் கூட்டத்திற்குப் போகிறேன். எனக்குப் புரிகிறது, அந்தப் பெரிய பரிசுத்த ஆவியானவர் அங்கே மேலே மக்களின் இருதயங்களின் இரகசியங்களை வெளிப் படுத்திக் கொண்டிருக்கிறார்"" என்று சொல்வது, நமக்கு அவ்வளவு பாதுகாப்பு உணர்வைத் தர வேண்டும். கடைசி நாட்களில் அவர் வெளிப்படுத்தப்படும்போது அவர் அதைத்தான் செய்வார் என்று அவர் சரியாகச் சொன்னார். அதுதான் தாம் சரியாகச் செய்யப்போவது என்று இயேசு கிறிஸ்து தாமே சொன்னார். " "125 மேலும் அவர், ""சோதோம் நாட்களிலிருந்தது போன்ற நிலையில் உலகம் இருக்கும்"" என்று சொன்னார். இப்போது உலகம் அப்படித்தான் இருக்கிறது. ""அப்போ திருந்தபடியே சபைகள் பிரிக்கப்பட்டிருக்கும்"" என்று அவர் சொன்னார், லோத்து, வெதுவெதுப்பானவர்கள், பாபிலோனில் கீழே, அல்லது சோதோமில் கீழே, மற்றும் சோதோமியர்கள். அவர், ""ஆபிரகாம், தெரிந் தெடுக்கப்பட்ட, அழைக்கப்பட்ட கூட்டம்"" என்று சொன்னார், மேலும் அவர் தெரிந்தெடுக்கப்பட்ட கூட்டத்திற்கு ஒரு தூதனை அனுப்பினார். மேலும் அவர் ஒவ்வொருவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு தூதர்களை அவர்களிடம் அனுப்பினார். அவர் அதைத்தான் செய்திருக்கிறார், ஒவ்வொரு பெயருக்கும், ஒவ்வொரு செயலுக்கும், ஒவ்வொரு அசைவுக்கும், எல்லாவற்றிற்கும் கூட மிகச் சரியாக, ஒவ்வொரு அடையாளமும், ஒவ்வொரு வெளிப்பாடும், சரியாக அதேபோல இருக்கிறது. அது நடக்கும் என்று அவர் சொன்னார்." 126 இப்போது நாம் எதைப் பற்றிப் பயப்படுகிறோம்? இந்தக் காரியங்கள் நம் மீது எதற்காக இருக்கின்றன? நாம் அதைக்குறித்து என்ன செய்வோம் என்று பார்க்க, அவர் நம்மைச் சோதித்துக் கொண்டிருக்கிறார். கவனியுங்கள். "127 அவர் அவர்களிடம், ""இப்போது, நீங்கள் என்னை விசுவாசிக்க முடியா விட்டால், நான் செய்யும் கிரியைகளை விசுவாசியுங்கள்; நான் யார் என்பதற்கு அவைகள் சாட்சி கொடுக்கின்றன"" என்று சொன்னார். அவர்கள் அதை அறிந்திருக்க வேண்டும், ஆனால் அவர்கள் அறியவில்லை. அவர்கள்..." "128 அவர் தேவனாயிருந்தார், அவரே சிருஷ்டித்தவர், காற்றையும் கடலையும் சிருஷ்டித்தவர். அவரால் காற்றையும் கடலையும் சிருஷ்டிக்க முடிந்ததென்றால், அவை தமது வார்த்தைக்குக் கீழ்ப்படியும்படி அவரால் இன்னும் அதிகமாகச் செய்ய முடியாதா? அவர் எல்லாவற்றையும் சிருஷ்டித்திருந்தால், அவரால் எல்லாவற் றையும் கீழ்ப்படியச் செய்ய முடியாதா? நம் சரீரங்களையும் அவரே சிருஷ்டித்தார் என்பதையும், அவையும் அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதையும் நினைவுகூருவோம். ""சரி,"" நீங்கள் சொல்கிறீர்கள், ""நான் அதை மட்டும் உறுதியாக நம்ப முடிந்தால்."" சரி, நாம் அதை உறுதியாக நம்புகிறோம். அது அப்படித்தான் என்பதை நிரூபிக்க அவர் இங்கே இருக்கிறார். அவை அதற்குக் கீழ்ப்படிய வேண்டும். நினைவில் கொள்ளுங்கள். அவர் வைத்திருக்கிறார்..." 129 நாம் ஒருவேளை ஒரு கரண்டி சாம்பலைத் தவிர வேறொன்றும் இல்லாமல் கிடக்கும்போது, அந்தச் சாம்பலை எழுப்புவதாக அவர் வாக்குத்தத்தம் செய்தார். அதை எழுப்புவதாக அவர் வாக்குத்தத்தம் செய்தார். சரீரம் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும். நாம் மரிக்கும்போது அதுதான் நடக்கிறது, நாம் எழுப்பப்படுவோம் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம், ஏனென்றால் அவர் அதைச் செய்வார் என்று வாக்குத்தத்தம் செய்தார். அவருடைய வாக்குத்தத்தமே அவருடைய வார்த்தை, நாம் விசுவாசிக்கிறோம். சரீர உயிர்த்தெழுதலை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நிச்சயமாக. நீங்கள் விசுவாசிக்காவிட்டால், நீங்கள் ஒரு கிறிஸ்தவர் அல்ல. ஆகையால் கடைசி நாட்களில் அவர் நம்மை எழுப்புவார் என்று நாம் விசுவாசிக்கிறோம். அவர் அதைச் செய்வதாக வாக்குத்தத்தம் செய்தார். அது என்ன? அது அவருடைய வார்த்தை. அந்த வார்த்தையின் மீதுதான் நாம் நமக்குள்ள அனைத்தையும் பணயம் வைக்கிறோம். 130 பின்னர் வார்த்தை நம்முடன் இருப்பதாக அடையாளம் காட்டப்படுவதைக் காணும் நேரத்திற்கு வரும்போது; அப்போது நாம் சீஷர்களைப் போலவே இருக்கிறோம், மற்றொரு சந்தர்ப்பத்தில் அவர்கள் கடலில் வெளியே இருந்தபோது, அவர்கள் மீண்டும் மூழ்கும் நிலையில் இருந்தார்கள். "அவர்கள் இயேசு தண்ணீரின் மேல் நடந்து வருவதைக் கண்டார்கள், அவர்கள் பயந்தார்கள். அவர்கள், ""அது-அது ஒரு ஆவி (spook). அது பயங்கரமானது"" என்றார்கள். அது ஒரு ஆவி என்று பயந்து, அவர்கள் பயத்தினால் அலறினார்கள். அவர்களுக்கு உதவக்கூடிய ஒரே விஷயம் அதுதான், அவர்கள் அதைக் கண்டு பயந்தார்கள். " "131 இன்றும் அது அப்படியே இருக்கிறது, மக்களுக்கு உதவக்கூடிய ஒரே விஷயம், அவர்கள் அதற்குப் பயப்படு கிறார்கள். அவர், ""பயப்படாதிருங்கள். நான்தான்"" என்றார். அவர் பேசுகிறார். அது அவர்தான் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? " அவர் தமது வார்த்தையினால் அடையாளம் காட்டப்படுகிறார். அப்படித் தான் அவர் முதல் முறையும் அடையாளம் காட்டப்பட்டார். ஒவ்வொரு முறையும் அவர் தமது வார்த்தையினாலேயே அடையாளம் காட்டப்படுகிறார். கவனியுங்கள். 132 இந்தச் சீஷர்கள்... சீஷர்கள் தங்களை முடிவில் கண்ட பிறகு, சிருஷ்டிகர் இன்னும் தங்களுடனே இருக்கிறார் என்பது அவர்களில் சிலருக்கு உதித்திருக்க வேண்டும். 133 இன்றிரவு அது நமக்கும் அதைச் செய்யும் என்று நான் நம்புகிறேன், ஏனென்றால் அவர் மாறாதவர் என்று எபிரெயர் 13:8 சொல்லுகிறது. "134 அப்போது அவர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் இயேசுவை எழுப்பினார்கள். ""போய் இயேசுவை எழுப்புங்கள். அவரை எழுப்புங்கள், அவரைச் சம்பவ இடத்திற்கு அழையுங்கள்!"" " அவரை அழைப்பது மிகவும் எளிது. தேவன் செய்த அநேக காரியங்களையும், வார்த்தைகள் அவரை நிரூபிப்பதையும் அவர்கள் பார்த்திருந்தார்கள்-பார்த்திருந் தார்கள். நாமும் அப்படியே. அவர் செயல் படுவதற்கு அழைப்பது கடினமானதாக இருக்கவில்லை. "135 அவர்கள் அவரை எழுப்பி, ""நாங்கள் மடிந்துபோவது உமக்குக் கவலையில் லையா?"" என்றார்கள். நீங்கள் சொல்கிறீர்கள், ""இதை நாம் எப்படி உறுதியாக நம்ப முடியும்? இதை நாம் நிரூபிக்க முடியுமா?"" " "136 யோவான் 14:12-ல், இயேசு, ""என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்"" என்றார். அது சரியாக இருக்கிறது. நமது விசுவாசம் கிறிஸ்துவை நம் பிரசன்னத்திற்குக் கொண்டுவருகிறது." "137 லூக்கா 17-ம் அதிகாரத்தில், ""கடைசி நாட்களில் மனுஷகுமாரன் வெளிப்படும் போது, அது சோதோம் மற்றும் கொமோராவைப் போன்ற ஒரு காலமாக இருக்கும்"" என்று அவர் சொன்னார். அது நடப்பதை நாம் காண்கிறோம்." "138 அந்த நேரம் சம்பவிப்பதற்கு முன்பாக, மல்கியா 4-ல், ""மக்களுக்கு ஒருமுறை அளிக்கப்பட்ட அந்த ஆதி விசுவாசத்திற்கு மக்களைத் திரும்பப் புதுப்பிக்கும் ஒரு செய்தி புறப்பட்டுச் செல்லும்"" என்று அவர் சொன்னார். அதைச் செய்வது எப்போதும் தேவனுடைய திட்டம். பின்னர் துன்மார்க்கர்கள் சாம்பலாக இருப்பார்கள், நீதிமான்கள் தங்கள் கால்களால் வெளியே நடந்து செல்வார்கள். " 139 வாக்குத்தத்தம் செய்யப்பட்ட இவை அனைத்தையும் நாம் காண்கிறோம். நீங்கள், நீங்கள், நீங்கள், நீங்கள் ஒவ்வொருவரும் அவரைச் சம்பவ இடத்திற்கு அழைப் பதற்காக அவர் இப்போதே காத்துக் கொண்டிருக்கிறார். அவரைச் சம்பவ இடத்திற்கு அழைத்தல்! "அங்கேதான் அவர் இருக்க விரும்புகிறார், சம்பவ இடத்தில் செயல்படுவதற்கு அழைக்கப்பட விரும்பு கிறார். கவனியுங்கள், நீங்கள் அவரைச் சம்பவ இடத்திற்கு அழைக்கும்போது, ""நாம் அவரை எழுப்புவோம்"" என்று நாம் சொல்வோம். பின்னர், தமது வார்த்தையையும், தாம் செய்வதாக வாக்குத்தத்தம் செய்த காரியத்தையும் அவர் உறுதிப் படுத்தும்படி, அவர் செய்யும் விதமாக அவரை அழையுங்கள். " கடைசி நாட்களில் இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடு, சோதோம் நாட்களில் இருந்ததைப் போலவே இருக்கும் என்பதை நாம் அறிவோம். அவர் வெளிப்படுத்தப் படும்போது, அந்த வெளிப் பாட்டைச் சபைக்கு வாக்குத்தத்தம் செய்தார். ஆகையால் சந்தேகப்படாமலும் பயப்படா மலும் இருங்கள், அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். "140 ஒருமுறை, அவர் எவ்வளவு பெரியவர் என்பதைப் பற்றி நான் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு பெண்மணி சொல்வதைக் கேட்டேன். அவள் சொன்னாள், ""மிஸ்டர் பிரான்ஹாம், உங்கள் போதனையில் எனக்கு எதிரான ஒரு விஷயம் இருக்கிறது."" " "141 நான் சொன்னேன், ""சரி, நன்றி, உங்களுக்கு ஒரே ஒரு விஷயம் மட்டும் இருந்தால்."" நான் சொன்னேன், ""நான்-நான் தேவன் அதை மட்டும்தான் காண்பார் என்று நம்புகிறேன்."" அவள் சொன்னாள், ""சரி, நீங்கள் இயேசுவைப் பற்றி அதிகமாகப் புகழுகிறீர்கள்."" " "142 நான் சொன்னேன், ""எனக்கு எதிராக இருப்பது அது மட்டும்தான் என்று நம்புகிறேன்."" மேலும்-மேலும் நான் சொன்னேன், ""நான் அவரைப் பற்றிப் போதுமான அளவு புகழவில்லை.""" "143 அவள் சொன்னாள், ""ஓ, ஆம், நீங்கள் செய்கிறீர்கள்."" அவள் சொன்னாள், ""நீங்கள் அவரைத் தெய்வீகமாக்குகிறீர்கள்."" இயேசு தெய்வீகமானவர் என்று நம்பாத ஒரு பெண் அவள். அவள் ஒரு கிறிஸ்தவ விஞ்ஞா னத்தைச் (Christian Science) சேர்ந்தவள். அவள் சொன்னாள், ""நீங்கள் அவரை-நீங்கள் அவரைத் தெய்வீகமாக்குகிறீர்கள், அவரைத் தேவனாக்குகிறீர்கள்."" " "144 நான் சொன்னேன், ""அவர் தேவனாக இருக்க வேண்டும், அல்லது உலகம் இதுவரை அறிந்திராத மிகப்பெரிய ஏமாற்றுக்காரராக இருக்க வேண்டும்."" நான் சொன்னேன், ""அவர்...""" "145 அவள் சொன்னாள், ""சரி, அவர் அப்படி இல்லை என்பதை உங்கள் வேதாகமத்தின் மூலமே நான் உங்களுக்கு நிரூபிக்க முடியும். அவர் வெறுமனே ஒரு தீர்க்கதரிசி."" நான் சொன்னேன், ""அவர் ஒரு தீர்க்கதரிசி, உண்மையாகவே, ஆனால் அவர் தேவனாகவும் இருந்தார்."" அவள் சொன்னாள், ""அவர் ஒரு மனிதராக இருந்தார், அவர் அழிவுள்ளவராக இருந்தார்.""" "நான் சொன்னேன், ""அதுவும் உண்மைதான்."" " "146 அவள் சொன்னாள், ""லாசருவைக் கல்லறையிலிருந்து எழுப்புவதற்காகப் போகும் வழியில், யோவான் சுவிசேஷம் 11-ம் அதிகாரத்தில், 'இயேசு கண்ணீர் விட்டார்' என்று வேதாகமம் சொல்லுகிறது."" நான் சொன்னேன், ""அது உண்மைதான்.""" "147 அவள் சொன்னாள், ""சரி, அவர் தெய்வீகமானவராக இருக்க முடியாது என்பதையும், அழுதுகொண்டிருந்தவர் என்ப தையும் அது நிரூபிக்கிறது."" " "148 நான் சொன்னேன், ""ஓ, என், அம்மையாரே, அதுதான் உங்கள் வாதமா?"" நான் சொன்னேன், ""அது ஒரு பலவீனமான வாதம்."" அவள் சொன்னாள்... நான் சொன்னேன், ""உண்மை, அவர் கண்ணீர் விட்டபோது அவர் ஒரு மனிதராக இருந்தார்; " "ஆனால் அவர் தனது சிறிய உடலை அசைத்து, தனது சிறிய தோள்களைப் பின்னுக்கு இழுத்து, 'லாசருவே, வெளியே வா' என்று சொன்னபோது, நான்கு நாட்களாக மரித்துப்போய்க் கல்லறையில் அழுகிக் கொண்டிருந்த ஒரு மனிதன் எழுந்து நின்று மீண்டும் வாழ்ந்தானே, அது ஒரு மனிதனுக்கும் மேலானது. அது தேவன்."" " 149 அன்று இரவு அவர் அந்தப் படகில் வெளியே கடலில் இருந்தபோது, கடலின் பத்தாயிரம் பிசாசுகள் அவரை மூழ்கடிப்பதாக ஆணையிட்டிருந்தபோது, அவர் ஒரு மனிதராக இருந்தார். அந்தச் சிறிய பழைய படகு புயல் வீசும் கடலில் அங்கே ஒரு பாட்டில் மூடியைப் போலத் தூக்கி எறியப்பட்டது. "அவர் ஒரு மனிதராக இருந்தார், களைத்து, தூங்கிக்கொண்டிருந்தார். ஆனால் அவர்கள் அவரை எழுப்பி, அவரைச் சம்பவ இடத்திற்கு அழைத்தபோது, அவர் ஒரு காலை படகின் விளிம்பின் மேல் வைத்து மேலே பார்த்து, ""இரையாதே, அமைத லாயிரு"" என்று சொன்னார், காற்றும் அலைகளும் அவருக்குக் கீழ்ப்படிந்தன. அது ஒரு மனிதனுக்கும் மேலானது. அது தேவன்." 150 அவர் பசியோடு மலையிலிருந்து கீழே இறங்கி வந்து, சாப்பிடுவதற்கு ஏதாவது கிடைக்குமா என்று ஒரு மரத்தைப் பார்த்தபோது அவர் ஒரு மனிதராக இருந்தார். அவர் பசியோடு இருந்தபோது அவர் ஒரு மனிதராக இருந்தார். ஆனால் அவர் ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, ஐயாயிரம் பேரைப் போஷித்தபோது, அது ஒரு மனிதனுக்கும் மேலானது. அந்த மனிதருக்குள் இருந்தது தேவன். 151 எப்போதாவது ஒரு அற்பமான காரியத்திற்குப் பிரயோஜனமாய் இருந்தி ருக்கிற ஒவ்வொரு நபரும், அதை விசுவாசித்த மக்களாகவே இருந்திருக் கிறார்கள். சரி. கவிஞர்கள் மற்றும் இன்னும் பலர் அதை விசுவாசித்தார்கள், தேவன் உலகத்தைத் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ள கிறிஸ்துவுக்குள் இருந்தார் என்று விசுவாசித்தார்கள். "152 இப்போது கிறிஸ்து மக்களை தேவனுடன் ஒப்புரவாக்க சபையில் இருக்கிறார். அவர் அதைச் செய்வதாக வாக்குத்தத்தம் செய்தார். ""அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்"" என்று எழுதப்பட்டுள்ளது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? " சம்பவ இடத்திற்கு அழைக்கப் படுவதற்காக அவர் இப்போது காத்துக் கொண்டிருக்கிறார் என்று நான் என் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன். இப் போது அவரைச் சம்பவ இடத்திற்கு அழைக்கக்கூடிய ஒரே விஷயம், நமக்குள்ளே அவரை எழுப்பி, அவரைச் சம்பவ இடத்திற்கு அழைப்பதே ஆகும். "153 தேவன் உலகத்திற்குக் கொடுத்த மிகப்பெரிய ஈவு அவரே. ""தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்தியஜீவனை அடையும் படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்."" தேவனையும் அவருடைய ஈவையும் கவனியுங்கள். இப்போது, மக்கள் தேவனுடைய ஈவைப் பயன்படுத்தினார்கள். " "154 ஒருமுறை, ஒரு சிறிய பெண்மணி, அவர் மாம்சத்தில் தேவனுடைய வெளிப்பாடு என்று விசுவாசித்தாள். அவள், ""நான் அவருடைய வஸ்திரத்தையாகிலும் தொட் டால், நான்-நான்-நான் சொஸ்தமாவேன்"" என்று சொன்னாள்." "155 இப்போது, அவள் அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள். அவர் திரும்பிப் பார்த்து, ""என்னைத் தொட்டது யார்? பாருங்கள், வல்லமை, பலன், என்னிலிருந்து புறப்பட்டது"" என்று சொன்னார். அவள் அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள். அது அவள் தேவனுடைய ஈவைப் பயன்படுத் தியதாகும். பாருங்கள்? அதனால் அவர் பலவீனமடைந்தார். ஆனால் அவர் லாசருவின் வீட்டை விட்டுச் சென்றபோது..." "156 நினைவில் கொள்ளுங்கள், யோவான் 5:19-ல், இயேசு, ""மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், பிதா செய்கிறவைகளை குமாரன் காண்கிறா ரேயன்றி, தாமாய் ஒன்றும் செய்யமாட்டார்"" என்று சொன்னார். நி" னைவில் கொள்ளுங்கள், இயேசு கிறிஸ்து என்ன செய்ய வேண்டும் என்று முதலில் ஒரு தரிசனத்தைக் காணும் வரை, இயற்கைக்கு அப்பாற்பட்ட வழியில் ஒருபோதும் ஒரு அற்புதத்தைச் செய்ய வில்லை, எதையும் செய்யவில்லை. அது சத்தியம் என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? "யோவான் 5, ""மெய்யாகவே, நான் கேட்பதை அல்ல, யாரோ ஒருவர் என்னிடம் சொல்வதை அல்ல; பிதா செய்வதை நான் எதைக் காண்கிறேனோ, அதைக் குமாரனும் அப்படியே செய்கிறார்."" இப்போது அது அப்படி இல்லையென்றால், மீதமுள்ள வேதவசனங்களும் அப்படி இல்லை. " """மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், குமாரன் தமக்குள் ஒன்றும் செய்ய முடியாது; ஆனால் பிதா செய்வதை அவர் எதைக் காண்கிறாரோ, அதைக் குமாரன் செய்கிறார். பிதா கிரியை செய்து வருகிறார், நானும் இதுவரைக்கும் கிரியை செய்து வருகிறேன்."" வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவன் தன்னிடம் என்ன செய்யச் சொன்னாரோ அதை அவர் அப்படியே செய்தார்." 157 இப்போது, நினைவில் கொள் ளுங்கள், அவர் லாசருவின் வீட்டை விட்டுச் சென்ற போது, அவர் பல நாட்கள் சென்றிருந்தார். லாசரு நோய்வாய்ப்பட்டார், அவர்கள் அவரை அழைத்து வர ஆள் அனுப்பினார்கள். அவர் போகவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு, லாசருவுக்கு நோய் அதிகமானது. "அதனால் அவர்கள் மீண்டும் அவரை அழைத்து வர ஆள் அனுப்பினார்கள், அவர் அப்போதும் போகவில்லை. பின்னர் நடக்கும் என்று பிதா அவருக்குக் காண்பித்திருந்த குறிக்கப்பட்ட காலம் வந்தபோது, லாசரு மரித்தான். லாசரு மரித்தபோது அவர் திரும்பி, ""லாசரு மரித்துப் போனான், நான் அங்கே இராததினால் உங்கள் நிமித்தம் சந்தோஷப்படுகிறேன்"" என்று சொன்னார். " "அவர் அவனுக்காக ஜெபிக்க வேண்டும் என்றும், பலவற்றையும் அவர்கள் விரும்பிக் கொண்டிருப்பார்கள். தேவன் தன்னிடம் என்ன செய்யச் சொன்னாரோ, அவர் தரிசனத்தில் எதைக் கண்டாரோ, அதை அவர் அப்படியே செய்தார். பாருங்கள், என்ன செய்ய வேண்டும் என்று அவர் ஒரு தரிசனத்தைக் கண்டிருந்தார். ""ஆனால் நான் அவனை எழுப்பப் போகிறேன்."" ஹும்! அங்கே இருக்கிறீர்கள். " "158 மார்த்தாள் அவரைப் பார்க்க வருவதைக் கவனியுங்கள். அவள், ""ஆண்டவரே, நீர் இங்கிருந்தீரானால், என் சகோதரன் மரித்திருக்க மாட்டான். இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக் கொள்வதெதுவோ அதை தேவன் உமக்குத் தந்தருளுவார்"" என்று சொன்னாள். பார்த்தீர்களா?" "159 தாம் என்ன செய்யப்போகிறோம் என்பதை அவர் அறிந்திருந்தார். லாசருவின் கல்லறையில் அவரைப் பாருங்கள். அவர், ""பிதாவே, நீர் எனக்குச் செவி கொடுத்த படியினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன், ஆனாலும் சூழ்ந்து நிற்கும் இவர்களுக்காக இதைச் சொன்னேன்"" என்றார். " "160 ""லாசருவே, வெளியே வா!"" லாசரு மரித்தோரிலிருந்து எழுந்தான். " 161 இப்போது, அங்கே பலவீன மாவதைப் பற்றி அவர் எதுவும் சொல்ல வில்லை. அது தேவன் தமது ஈவைப் பயன்படுத்தியதாகும். மக்கள் தேவனுடைய ஈவைப் பயன்படுத்துவது வித்தியாசமாக இருந்தது. "162 ஏனென்றால், அவர் வார்த்தை யாயிருந்தார். ""தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்தைப் பார்க்கிலும் கருக்கானதாயிருக்கிறது"" என்று வேதாகமம் சொல்லுகிறது, ""இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறது."" " தேவன் மக்கள் மத்தியில் இருக்கிறார் என்பதை அது நிரூபிக்கிறது. ஆம். நாம் அதை விசுவாசிப்போம். இன்றிரவு, அவருடைய வார்த்தையின்படியே, சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட அவர் தயாராக இருக்கிறார். 163 இங்கே எத்தனை பேர் வியாதியுடனும் தேவையுடனும் இருக்கி றீர்கள், உங்கள் கைகளை உயர்த்துங்கள். உங்கள் கைகளை நான் பார்க்கட்டும், எங்கிருந்தாலும், எத்தனை பேர் வியாதி யுடனும் தேவையுடனும் இருக்கிறீர்கள். சரி, சம்பவ இடத்திற்கு அழைக்கப்படுவதற்கு மட்டுமே அவர் காத்துக்கொண்டிருக்கிறார். அவரிடம் கேளுங்கள். "164 இப்போது அவர் எனக்குக் கொடுத்த இந்த உடையில் அவர் இங்கே நின்று, நீங்கள் அவருக்கு முன்னால் வந்து, ""ஆண்டவராகிய இயேசுவே, நீர் என்னைச் சுகமாக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்"" என்று சொன்னால், அவர் என்ன சொல்வார் தெரியுமா? ""நான் ஏற்கனவே அதைச் செய்துவிட்டேன்.""" "165 ""நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு; அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம்."" அவரால் அதை இரண்டாவது முறையாகச் செய்ய முடியாது. எனவே, பாருங்கள், அவர் ஏற்கனவே அதைச் செய்துவிட்டார். நீங்கள் அதை விசுவாசிக்க வேண்டும். " உங்கள் இரட்சிப்பையோ அல்லது சுகத்தையோ சம்பாதிப்பதற்கு, எதற்கும் தகுதியாக உங்களால் செய்யக்கூடியது ஒன்றுமில்லை. அதைக் குறித்து உங்களால் எதுவும் செய்ய முடியாது. அது தேவனுடைய இலவச ஈவு. பாருங்கள், அது கிருபை, ஒரு இலவச ஈவு. நான் உங்களுக்கு ஒரு மில்லியன் டாலர்களைக் கொடுத்து, நீங்கள் என் டையை (tie) நேராக்கி விட்டால்; நான் அதை உங்களுக்குக் கொடுக்கவில்லை; அதற்காக நீங்கள் எதையோ செய்தீர்கள். பாருங்கள், தேவனுடைய ஈவு இலவச மானது. அவர் உங்களுக்காக, உங்களுக்காக இதை கிரயத்துக்கு வாங்கியிருக்கிறார் என்பதை நீங்கள் நம்புவது மட்டுமே நீங்கள் செய்ய வேண்டிய ஒரே காரியம். அவர்... அது ஏற்கனவே வாங்கப்பட்டுவிட்டது. அவர் உங்களுக்காக அதைச் செய்தார். மேலும் உலகத்தில் ஒரு மனிதனும் இல்லை... 166 பேட்டன் ரூஜில் (Baton Rouge) உங்களுக்கு என்ன இருந்தது என்று எனக்குத் தெரியாது. எல்லாமே நாட்டை அடித்துச் செல்கிறது, போலச்செய்தல்கள் (imperson ations) மற்றும் அது போன்றவை. அது அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நமக்குத் தெரியும். ஆனால் உங்களைச் சுகமாக்கும் வல்லமை தனக்கு இருப்பதாக ஒரு மனிதன் உள்ளே வந்து உங்களிடம் சொன்னால், அவன் பொய் சொல்கிறான். "தேவன் மட்டுமே சுகமாக்க முடியும். ""உன் நோய்களையெல்லாம் குணமாக்குகிற கர்த்தர் நானே."" அவர் தனது மகிமையை யாருடனும் பகிர்ந்துகொள்ள மாட்டார். சுகமாக்கும் வல்லமை எந்த மனிதரிடமும் இல்லை. " 167 ஆனால் தேவனை வெளிப் படுத்தக்கூடிய வரங்களைக் கொண்ட மனிதர்கள் இருக்கிறார்கள். உங்கள் போதகர்... [சகோதரர் பிரான்ஹாம் இருமுகிறார்] (என்னை மன்னியுங்கள்.) அவரால் தேவனை எடுத்துக்கொள்ள முடியும், ஒரு போதகராகிய அவருக்குள்ள வரத்தினால், அவரால் வார்த்தையை விளக்க முடியும், அதனால் நீங்கள் அதைப் பார்த்தே ஆக வேண்டும். பார்ப்பதற்குக் கண்கள் உங்களுக்கு இருந்தால், நீங்கள் அதைப் பார்ப்பீர்கள். அங்கே மற்றொன்று இருக்கிறது, ஒருவேளை வேறு சில வரம் இருக்கலாம். ஆனால் தேவனுடைய பிரசன்னத்தை வெளிப்படுத்தும் ஒரு வரம் எப்போதும் இருக்கிறது, அதன் மூலமாக, நீங்களே அதை விசுவாசிக்க வேண்டும். 168 ஒரு பாவி, பதினான்கு வயது வாலிபனாகவோ அல்லது இளம் பெண் ணாகவோ இங்கே பலிபீடத்திற்கு வரலாம், அவர்கள் உங்களுக்கு இங்கே உணவைக் கொண்டு வரலாம், நீங்கள் தொண்ணூறு வயதாகும் வரை கர்த்தரை நோக்கிக் கதறலாம், ஆனால் நீங்கள் ஒருபோதும் இரட்சிக்கப்பட மாட்டீர்கள். ஆனால் அவர் உங்களுக்காகச் செய்ததை நீங்கள் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். பாருங்கள்? நீங்களே அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பின்னர் நீங்கள் அதை ஏற்றுக் கொள்ளும்போது, நீங்கள் விசுவாசிப்பதை நீங்கள் அறிக்கை செய்வதன் பேரில் பரிந்து பேசுவதற்கு, அவர் பிரதான ஆசாரியராகவும், மத்தியஸ்தராகவும் இருக்கிறார். 169 இப்போது இந்த வழியில் ஒரு வரத்தின் மூலமும் அதே காரியம்தான் நடக்கிறது. அது உங்கள் சொந்த மனதை உங்களிலிருந்து விலக்கி, பின்னர் அவர் என்ன செய்யச் சொல்கிறார் என்பதைப் பார்ப்பதாகும். "170 மக்கள் மேடைக்கு வருவதை நான் பார்க்கிறேன், அவர்கள் மேலும் கீழும் குதித்து அலறுகிறார்கள், ""ஓ, சகோதரர் பிரான்ஹாம், எனக்கு உலகத்திலுள்ள எல்லா விசுவாசமும் இருக்கிறது"" என்று சொல் கிறார்கள். அப்படியானால் நீங்கள் இங்கே மேலே என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? பாருங்கள்? அது-அது உணர்ச்சிவசப்படுதல், விசுவாசம் அல்ல." "171 உண்மையான விசுவாசம் தோல் வியை அறியாது. அது ஏற்கனவே நடந்து முடிந்து விட்டது. அது ஏற்கனவே முடிந்து விட்டது. தேவன் அப்படிச் சொன்னார், அது அதை முடித்துவைக்கிறது, நீங்கள் பார்க்கிறீர்கள். ""தேவன் அப்படிச் சொன்னார்!"" இப்போது எந்த நேரத்திலும் அதே காரியம்தான். நீங்கள் அதை உண்மையில் நம்பும்போது, அது அவரைத் தொடுகிறது. " "172 இப்போது அவருடைய வஸ்திரத்தைத் தொட்ட அந்தச் சிறிய பெண்மணி, ""நான் அவருடைய வஸ்திரத் தையாகிலும் தொட்டால், நான் சொஸ்தமாவேன்"" என்று சொன்னாள், அவள் அதைச் செய்தாள். " "அவள் விசுவாசம் அவளை என்ன செய்யத் தூண்டியதோ அதை அவள் செய்தபோது, அதாவது ""அதைத் தொட்ட போது,"" அவர் அதை உணர்ந்தார், பாருங்கள், அவர் திரும்பிப் பார்த்து அவளிடம் பேசினார். " 173 இப்போது, அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். நீங்கள் கிறிஸ்துவை மட்டும் விசுவாசித்தால், விசுவாசியுங்கள்! உங்கள் விசுவாசம் அவருடைய வஸ்திரத்தைத் தொடட்டும். மேலும் அவர், இப்போதே, நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக்கூடிய பிரதான ஆசாரியராக இருக்கிறார். நம் அனைவருக்கும் அது தெரியும். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருந்தால், அவர் அதே பிரதான ஆசாரியராக இருந்தால், நேற்று அவர் செய்தது போலவே இன்றும் அவர் செயல்பட வேண்டும். இப்போது நீங்கள் அதை விசுவாசிக்க மாட்டீர்களா? தேவன் மீது விசுவாசம் வையுங்கள். 174 நான் உங்களுக்குப் பொய்யைச் சொல்லியிருந்தால், தேவன் அதை ஆதரிக்க மாட்டார். ஆனால் நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொல்லியிருக்கிறேன், அவர்-அவர் அதை ஆதரிப்பார். சத்தியத்தை ஆதரிக்க அவர் கடமைப்பட்டிருக்கிறார். "175 இயேசு, ""எனக்கு ஒரு சாட்சி இருக்கிறது"" என்று சொன்னார். அந்தச் சாட்சி தேவனுடைய வார்த்தைதான், நிச்சயமாக. ""வேதவாக்கியங்களே என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கின்றன. அவை என்னைக் குறித்துச் சாட்சிகொடுக்கவில்லை என்றால், அதை நம்பாதீர்கள்"" என்று அவர் சொன்னார். பாருங்கள்? " "176 நான் இப்போது உங்களிடம் சொல்லிக் கொண்டிருப்பதை, அதாவது, ""அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்"" என்பதை வேதம் சாட்சிகொடுக்கவில்லை என்றால், வேதத்தை நம்பாதீர்கள். ஏனென்றால், அவர் மாறாதவர் என்று வேதம் சொன்னது, மேலும் இந்தக் கடைசி காலத்திற்காக அவர் இந்தக் காரியங்களை வாக்குத்தத்தம் செய்தார். " நினைவில் கொள்ளுங்கள், யூத காலத்தின் முடிவில்தான், அவர் தன்னை மேசியாவாக வெளிப் படுத்தினார். சமாரியர்களின் காலத்தின் முடிவில், அவர் அதையே செய்தார். இப்போது இது புறஜாதிகளின் காலத்தின் முடிவு. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். 177 உங்கள் மனசாட்சியில் அவரை எழுப்புங்கள், அவரைச் சம்பவ இடத்திற்கு அழையுங்கள், நாம் நம் தலைகளைத் தாழ்த்தலாம். 178 பரலோக பிதாவே, இப்போது உம்மிடமிருந்து வரும் ஒரு வார்த்தை போதுமானதாக இருக்கும், அதுவே எங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் இருக்கும், உம்மிடமிருந்து ஒரே ஒரு வார்த்தை. நாங்கள் செய்ய முயற்சிப்பது என்னவென்றால், மக்கள் தாங்கள் நேசித்துச் சேவிக்கும் கர்த்தராகிய இயேசுவின் பலன்களைப் பெற்றுக்கொள்ளச் செய்வதே ஆகும் என்ற இந்தச் சாதனையை, மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளட்டும் ஆண்டவரே. "இன்றிரவு அவர்கள் அதைச் செய்யட்டும், ஏனென்றால் உம்முடைய மரணம் வீணானது அல்ல, நீர் ""நம்முடைய மீறுதல்களினிமித்தம் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங் களினிமித்தம் நொறுக்கப் பட்டீர், நமக்குச் சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது, அவருடைய தழும்பு களால் நாம் குணமானோம்."" " இங்கே, தெய்வீகப் பிரசன்னத்தில் உள்ள அனைவரும், இதைப் புரிந்துகொண்டு, தரிசனத்தைப் பெற்று, தேவனுடைய மகிமைக்காகச் சுகமடையும்படி நான் ஜெபிக்கிறேன், தேவனே. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இந்தக் கூட்டத்துடன் என்னை நான் உமது கனத்திற்கும் மகிமைக்கும் ஒப்புக்கொடுக்கிறேன். ஆமென். 179 இப்போது மிகவும் பயபக்தியுடன் இருங்கள், சில நிமிடங்களுக்கு மட்டும். இப்போது அவரிடமிருந்து வரும் ஒரு வார்த்தை, நான் சொல்லக்கூடிய அனைத்தையும் விட, அல்லது வேறு யாரும் சொல்லக்கூடிய அனைத்தையும் விட மேலானதாக இருக்கும், ஏனென்றால் அதைச் செய்வது அவரே. அவரே ஒருவர். அவரே செய்பவர், கர்த்தராகிய இயேசு இப்போது உங்களுக்கு, ஒவ்வொருவருக்கும், இந்தக் காரியங்களை அருளுவார் என்று நாங்கள் நம்புகிறோம். 180 இப்போது மணி என்ன என்று பார்ப்போம். அது அவ்வளவு ஆகிவிட்டது என்று எனக்குத் தெரியவில்லை. நான் உங்களுக்குச் சொல்கிறேன், நாம் வெளியேற வேண்டிய நேரத்தில் வெளியேற, இந்த வரிசையை மேலே கொண்டுவருவதற்கு நமக்கு நேரமில்லை. கூட்டத்திலிருந்தே அதை அழைப்போம். 181 இப்போது ஒரு நிமிடம், நாம் வேதத்தை எடுத்துக்கொள்வோம். இந்நாளில், சோதோம் மற்றும் கொமோரா மீண்டும் திரும்ப வரும் என்று வேதாகமம் வாக்குத்தத்தம் பண்ணுகிறது. இப்போது அதை எத்தனை பேர் நம்புகிறீர்கள், உங்கள் கையை உயர்த்துங்கள்? வேதாகமம் அதை இப்போது அடையாளம் காட்டுகிறது. "182 அப்போது சோதோம் மற்றும் கொமோராவில் அது என்னவாக இருந்தது? அது மனித உருவிலிருந்த தேவன். அவர், ""சாராள் கூடாரத்தில், பின்னால் இருந்து ஏன் நகைத்தாள்? அல்லது, அவர் சொன்ன வார்த்தைகள் அப்படியே ஆகும் என்பதை அவள் ஏன் சந்தேகப்பட்டாள்?"" என்று கேட்டபோதுதான், ஆபிரகாம் அதை அறிந்துகொண்டார். தமக்குப்பின்னால் சாராள் என்ன நினைத்துக் கொண்டிருந்தாள் என்பதை அவரால் அறிந்துகொள்ள முடிந்தது. இப்போது அது அப்படி இல்லையா என்று நீங்கள் பாருங்கள்." 183 இப்போது, அது பாபிலோன் சபைக்கோ, அல்லது சோதோம் சபைக்கோ அல்ல. இல்லை, இல்லை. அது அங்கே கீழே சபைப் பிரிவு வரிசையில் உள்ள மக்களுக்கு அல்ல. இல்லை, ஐயா, ஒருபோதும் அவர்களிடம் போவதில்லை. அவர்கள் தங்கள் தூதனைப் பெற்றிருக்கிறார்கள். பாருங்கள்? "184 ஆனால், சூழ்நிலைகள் எப்படி இருந்தாலும் வார்த்தையை விசுவாசிக்க வேண்டிய, ஆபிரகாமின் விசேஷித்த வித்தான (super Seed), தெரிந்தெடுக்கப்பட்ட சபைக்கு, ""இல்லாதவைகளை இருக்கிறவைகளைப் போல் ஆபிரகாம் அழைத்தான்."" " தேவன் அப்படிச் சொன்னார், அவன் அதை விசுவாசித்தான். இப்போது, நண்பரே, இந்த வார்த்தையைக் காத்துக்கொள்ள, தேவன் கடமைப்பட்டிருக்கிறார் என்று நான் அறிவேன். 185 இப்போது நீங்கள், இந்தக் கட்டிடத்தில் எங்கிருந்தாலும், சில நிமிடங்கள் பயபக்தியுடன் அமர்ந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், நீங்கள் எங்கிருந்தாலும் சரி. மேலும் விசுவாசியுங்கள், உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். 186 இப்போது என்னால் உங்களைச் சுகமாக்க முடிந்தால், என் இருதயம் பரிதபிக்கிற இந்தச் சிறுமியை என்னால் சுகமாக்க முடிந்தால், அங்கே படுத்திருக்கும் அந்தச் சிறிய பிள்ளையை என்னால் சுகமாக்க முடிந்தால், நான்-நான்-நான் செய்வேன்-என்னால் முடிந்தால் இங்கிருந்து வட துருவம் வரை தவழ்ந்து சென்றாவது நான் செய்வேன், அல்லது மனித உணர்வுள்ள எவரும் செய்வார்கள். ஆனால் என்னால் அதை ஒருபோதும் செய்ய முடியாது. அங்கே உங்களில் சிலர் ஒருவேளை புற்றுநோயுடன் சிறிது காலமே வாழலாம். என்னால் உங்களைச் சுகமாக்க முடிந்தும் அதைச் செய்யாமல் இருந்தால், நான் இந்த மேடையில் நிற்கத் தகுதியற்றவன் ஆவேன். இப்போது, என்னால் முடியாது. என் இருதயம் உங்களுக்காகப் பரிதபிக்கிறது. என்னால் முடிந்தால் நான் செய்வேன், ஆனால் என்னால் முடியாது. இதைச் செய்யக்கூடிய வேறொரு மனிதனும் இல்லை. அது சரி. ஆனால், பாருங்கள், இயேசு ஏற்கனவே அதைச் செய்துவிட்டார். பாருங்கள்? நீங்கள் அதை நம்பும்படி செய்வதற்கு மட்டுமே அவர் முயற்சிக்கிறார். ஆனால் நீங்கள்... 187 மக்களுக்காக நான் வருத்தப் படுகிறேன். அநேக காரியங்கள் அவர்களை இப்படியும் அப்படியுமாகப் பார்வையற்றவர் களாக்கிவிட்டன, பாவம் மக்கள், ஏறக்குறைய மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போல இருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. "ஒருவர் இதைச் சொல்கிறார், ஒருவர் அதைச் சொல்கிறார். மனிதன் சொன்னதை நினைக்காதீர்கள். ""அற்புதங்களின் நாட்கள் கடந்து போய்விட்டன. பரிசுத்த ஆவியின் ஸ்நானம் என்றெல்லாம் எதுவும் இல்லை."" " "188 மேலும், நினைவில் கொள்ளுங்கள், பெந்தேகோஸ்தே நாளில் பேதுரு, ""வாக்குத் தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளை களுக்கும், நம்முடைய தேவனாகிய ஆண்டவர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது"" என்று சொன்னார். பாருங்கள்?" 189 இந்தக் கடைசி நாட்களில் இந்தக் காரியங்கள் நடக்கும் என்றும், இன்றிரவு இங்கே நீங்களும் நானும் இருப்பது போல, தேவன் மனித மாம்ச வடிவில் திரும்புவார் என்றும், உலகம் அழிக்கப்படுவதற்கு முன்பு அதே காரியத்தைச் செய்வார் என்றும் இயேசு வாக்குத்தத்தம் செய்தார். உலகம் ஒரு சோதோமைப் போல இருக்கும். பாருங்கள்? இப்போது நாம் சோதோம் நிலையைச் சரியாகப் பெற்றிருக்கிறோம்; ஒவ்வொரு நிலையும், ஒவ்வொரு நபரும், எல்லாமே மிகச் சரியாக அமைந்திருக்கிறது. 190 இப்போது நம் விசுவாசம் அதற்கு நேராக வர முடியாதா? நம்மால் அவரைச் சம்பவ இடத்திற்கு அழைக்க முடியாதா? அவரைச் சம்பவ இடத்திற்கு அழையுங்கள். உங்கள் விசுவாசம் மட்டுமே அதைச் செய்யக்கூடிய ஒரே விஷயம். இப்போது நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். 191 நான் உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். ஜெப அட்டைகள் எதுவும் இல்லாமல், ...- இங்கே யாரையும் மேலே கொண்டுவராமல், அந்தப் பெரிய பரிசுத்த ஆவியானவர் இங்கே கீழே இறங்கி வந்து, உங்கள் அபிஷேகத்தினாலும் என் மேலுள்ள அபிஷேகத்தினாலும், இயேசு கிறிஸ்து இதுபோல நம் மத்தியில் கிரியை செய்கிறார் என்பதை அடையாளம் காட்டினால், அவரால் இன்னும் என்ன செய்ய முடியும்? அதற்கு மேலே வேதாகமத்தில் வேறு வாக்குத்தத்தம் இல்லை. அதுதான் மிக உயர்ந்த வாக்குத்தத்தம். அது எத்தனை பேருக்குத் தெரியும்? நிச்சயமாக, அதுதான். அது-அதுதான் சபைக் காலத்திற்குரிய கடைசி விஷயம். 192 யூதர்களுக்கு, உபத்திரவ காலத்தின் நேரத்திலும், மேலும்... அங்கே அவர்களுக்கு ஒரு சந்திப்பு இருக்கிறது, ஆனால் புறஜாதி சபைக்கு அல்ல. 193 இது புறஜாதிகளுக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கடைசி விஷயம். இது உண்மை. பாருங்கள், அங்கே சோதோமில் இருந்த புறஜாதிகள்தான் எரிக்கப்படப் போகிறார்கள். மேலும் அது, இதோ மணவாட்டி, ஆபிரகாமின் ராஜரீக வித்தாக இருந்து, புறஜாதிகள் மத்தியிலிருந்து வெளியே அழைக்கப்பட்ட மணவாட்டியாக இருக்கிறாள். அதுதான் அவர்களுக்குரிய முடிவின் அடையாளம், அவ்வளவுதான். 194 உங்கள் புத்தகத்தில் அதைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். நான் ஒரு வயதான மனிதன். ஆனால் உங்கள் புத்தகத்தில் அதைக் குறித்து வைத்துக்கொண்டு, அது சம்பவிக்கிறதா இல்லையா என்று பாருங்கள். பாருங்கள், நீங்கள் இப்போது முடிவில் இருக்கிறீர்கள். எப்போது? எனக்குத் தெரியாது. நான் இன்றே அவரை எதிர் பார்க்கிறேன். அவர் இன்று வரவில்லை என்றால், நான் நாளை அவரை எதிர் பார்த்துக்கொண்டிருப்பேன். அவர் நாளை வரவில்லை என்றால், மறுநாள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன். அவர் இந்த வருடம் வரவில்லை என்றால், அடுத்த வருடம் அவருக்காக எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன். அவர் வருகிறார் என்று எனக்குத் தெரியும். நிமிஷமோ வேளையோ எனக்குத் தெரியாது, ஆனால் எடுத்துக்கொள்ளப் படுதலுக்கு (Rapture) எல்லாம் தயாராக நிறைவேறி விட்டது என்று எனக்குத் தெரியும். சபை வெளியே அழைக்கப்பட்டு விட்டது. அது ஒரு இரகசியமாகச் செல்லுதலாக இருக்கும்; அப்படியே மறைந்து விடுவார்கள், அவ்வளவு தான் நடக்கும். 195 நோவாவின் நாட்களில் செய்தது போலவே, உலகம் அப்படியே தொடர்ந்து செல்லும், மக்கள் பிரசங்கிப்பார்கள், மக்கள் தாங்கள் இரட்சிக்கப்படுவதாக நினைப் பார்கள். நோவா பேழைக்குள் பிரவேசித்தார், மக்கள் அப்படியே தொடர்ந்து சென்றார்கள், உலகம் அப்படியே சுழன்றது. அதை நினைத்துப் பாருங்கள்! மேலும், தாங்கள் இரட்சிக்கப்பட்டதாக நினைத்துக்கொண்டு, நித்தியமாக இழக்கப்படுவார்கள். 196 இன்னும் கொஞ்ச நாட்களில் நான் இந்த நாட்டிற்கு ஒரு பெரிய கூடாரத்தைக் கொண்டு வந்து, இங்கே அதை அமைப்பேன், அப்போது நாம் மதிய வேளை கூட்டங்களையும், போதனைகளையும் வைத்துக் கொள்ளலாம், எனவே நீங்கள் இந்தக் காரியங்களை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும். நாம் ஆராதனைகளை வைத்துக்கொள்ளும்படி, நம் சகோதரர்கள் அனைவரையும் ஒன்றுகூட்டுங்கள். 197 இப்போது இயேசு கிறிஸ்து தமது வாக்குத்தத்தத்தை நிறைவேற்றினால், அவரை விசுவாசிக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம். நீங்கள் அனைவரும், ஒவ்வொருவரும், அவரை விசுவாசிக்கக் குழந்தையைப் போன்ற எளிய விசுவாசத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். "198 இப்போது நீங்கள் உங்கள் தலை களைத் தாழ்த்தி, ""ஆண்டவராகிய இயேசுவே, இப்போது இந்த மனிதருக்கு என்னைத் தெரியாது என்று எனக்குத் தெரியும். நான் தேவையோடு இருக்கிறேன். நீர் எங்கள் பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக்கூடிய ஒரு பிரதான ஆசாரியர் என்று எங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. " "நீர் அவர் மூலமாகப் பேசினால்... நான் உம்மைத் தொட முடிந்தால், சும்மா அவர் மூலமாகப் பேசும் ஆண்டவரே, அது நீர்தான் என்று நான் அறிந்துகொள்வேன்... அவருக்கு என்னைத் தெரியாது என்று நான் அறிவேன்"" என்று சொல்லி ஜெபிக்கத் துவங்குங்கள். " 199 அங்கே கூட்டத்தில், விசுவாசம், அவிசுவாசம், பாசாங்கு விசுவாசம் (make-belief); பாவிகள், பரிசுத்தவான்கள் என அனைத்தும் கலந்த ஒரு கூட்டம் இருக்கிறது. "200 இப்போது நீங்கள் விசுவாசிக்க வேண்டும். இப்போது அவர் இந்தக் கூட்டத்திலிருந்து இதைச் செய்தால், இங்கிருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும், ""சகோதரர் பிரான்ஹாம், நான்-நான்... அவர் அன்று செய்தது போலவே சபையை நோக்கிக் கொண்டிருப்பது அவராகத்தான் இருக்க வேண்டும் என்று நான் அறிவேன்"" என்று சொல்ல வேண்டும். " "நீங்கள் உண்மையில் விசுவாசித்தால், நீங்கள் உங்கள் கையை உயர்த்தி, ""ஆண்டவரே, அவருடைய வாக்குத் தத்தத்தின்படி, இது கிறிஸ்து இயேசுதான் என்பதை நான் என் முழு இருதயத்தோடும் ஏற்றுக்கொள்கிறேன்"" என்று சொல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கட்டிடம் முழுவதும். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. " அது நல்லது. ஓ, இங்கே இருப்பதற்கு நமக்கு ஒரு மாதம் இல்லாமல் போனது மிகவும் வருத்தமளிக்கிறது. பாருங்கள், சும்மா... நான் உங்களுக்குப் புதியவன். பாருங்கள், இது கடினமானது. நீங்கள் தொடர்ந்து விசுவாசியுங்கள். 201 இப்போது, அது ஒரு ஒளி (Light). தேவன் ஒளியாக இருக்கிறார் என்பது நமக்குத் தெரியும், அக்கினி ஸ்தம்பம். இப்போது நீங்கள் ஜெபித்து அதைத் தொடுங்கள், கர்த்தராகிய இயேசு பதில் தருவாராக. 202 இப்போது இங்கிருக்கும் ஒவ்வொரு ஆவியையும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அவருடைய மகிமைக்காக நான் என் கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவருகிறேன். இப்போது மிகவும் பயபக்தியுடன் இருங்கள். ஜெபியுங்கள். மிகவும் பயபக்தியுடன் இருங்கள். 203 இப்போது, இதோ இங்கே இருக்கிறது. எனக்கு முன்னால் இங்கே ஒரு பெண்மணி இருக்கிறாள். அவள் தன் தலையைத் தாழ்த்தியிருக்கிறாள், தன் சொந்த உபத்திரவத்திற்காக அவள் ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். நீங்கள் இப்போது உங்கள் தலையை உயர்த்த விரும்பினால், அவள் எனக்கு நேர் எதிரே இங்கே இருக்கிறாள். உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? தேவன் அந்தச் சர்க்கரை வியாதியை (diabetes) சுகமாக்கி உங்களை நன்றாக்க முடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இப்போது, அதுதான் உங்களுக்கு இருக்கிறது, சர்க்கரை வியாதி. எனக்கு உங்களைத் தெரியாது. நீங்கள் எனக்கு முற்றிலும் அந்நியர். ஆனால் நான் அவருடைய ஊழியன் என்று நீங்கள் என்னை நம்புகிறீர்களா? நாமும்-நாமும் ஒருவருக் கொருவர் அந்நியர்களாக இருந்தால், மக்கள் பார்க்கும்படி உங்கள் கையை அப்படி உயர்த்துங்கள். பாருங்கள்? சரி. இங்கே அந்தப் பெண்மணி இருக்கிறாள். இப்போது அவள் நீரிழிவு நோயினால் (diabetic condition) அவதிப்படுகிறாள். நீங்கள் யார் என்று தேவனால் எனக்குச் சொல்ல முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? அது உங்களை நம்ப வைக்குமா? நீங்கள் திருமதி மார்ட்டின். அது சரியானால், உங்கள் கையை உயர்த்துங்கள். பாருங்கள்? நீங்கள் விசுவாசம் வையுங்கள். சந்தேகப்படாதீர்கள். விசுவாசம் வையுங்கள். 204 இப்போது அவள் எதைத் தொட்டாள்? நான் கூட்டத்தினரிடம் கேட்க விரும்புகிறேன். அவள் எதைத் தொட்டாள்? அங்கே ஒரு பெண் தன் வலது கையை உயர்த்தியிருக்கிறாள், தேவனுக்கு முன்பாக என்னுடையதும் உயர்த்தப்பட்டிருக்கிறது. பாருங்கள்? அவள் ஏதோ ஒன்றைத் தொட்டாள். ஒரு எளிய சிறிய பெண்மணி, உண்மையில், உங்களுக்கு உண்மையைச் சொல்லப்போனால், இப்போது இது உண்மையா என்று பாருங்கள், அது அவளை ஆச்சரியப்படுத்தியது. தனக்கு அவ்வளவு விசுவாசம் இருக்கும் என்று அவளுக்குத் தெரியவில்லை. விசுவாசம் என்பது நீங்கள் உற்பத்தி செய்வது அல்ல; அது உங்களிடம் இருக்கும் ஒன்று. பாருங்கள்? அவள் ஆச்சரியப்பட்டாள். இப்போது கூட அந்தப் பெண்மணி சில நிமிடங்களுக்கு முன்பு உணர்ந்ததை விட வித்தியாசமாக உணர்கிறாள். தனக்கு ஏதோ நடந்திருக்கிறது என்று அவளுக்குத் தெரியும். 205 இங்கே, அந்த ஒளியை (Light) நீங்கள் பார்க்கவில்லையா? சரி. இங்கே இந்தப் பெண்மணியின் மேல், சரியாக இங்கே பின்னால் அதைச் சரியாகப் பார்க் கிறீர்களா? அவள் ஒரு... அவதிப்படுகிறாள். அவள் தன் தலையைத் தாழ்த்தியிருக்கிறாள். அவள் ஜெபித்துக்கொண்டிருக்கிறாள். ஆனால் அவள் முதுகு வலியினால் (trouble with her back) அவதிப்படுகிறாள். அவள் தன் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால், அந்த முதுகு வலியிலிருந்து அவள் சுகமடையலாம். நிச்சயமாக. 206 எது நிச்சயமோ அதுபோலவே அவளும் அதைத் தவறவிடப் போகிறாள். பாருங்கள், அவளுடைய ஜெபம் இன்னும் தொடர்கிறது. ஆண்டவரே, எனக்கு உதவும். திருமதி டிவில் (DeVille), அது நீங்கள்தான். அது கிருபை. அந்தப் பெண்மணி ஜெபித்துக்கொண்டிருந்தார், சிந்திக்கக்கூட இல்லை, நான் சொல்வதைக் கேட்கவும் இல்லை. இப்போது அவருக்கு என்னைத் தெரியுமா என்று நீங்கள் அவரிடம் கேளுங்கள். அவர்தான் இவர், அதுதான் அவருடைய பிரச்சனை. 207 ஆகவே அவள் எதைத் தொட்டாள்? அதுதான் இயேசு கிறிஸ்துவின் நிரூபணம், வார்த்தை, இருதயத்திலுள்ள நினைவுகளை அறிந்துகொள்ளுகிறது. 208 நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? விசுவாசம் மட்டும் வையுங்கள். ஜெபியுங்கள், எங்கிருந்தாலும். சும்மா விசுவாசியுங்கள். அவ்வளவுதான் நீங்கள் செய்ய வேண்டும். சும்மா விசுவாசியுங்கள், நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொன்னேன் என்று சும்மா விசுவாசியுங்கள். இப்போது, நான் அவர் அல்ல. நான் அவருடைய ஊழியன், வெறுமனே அவருடைய ஊழியன். 209 உங்களுக்குப் போதுமான விசுவாசம் இருந்தால்! என்னால் அவரை அழைக்க முடியவில்லை. அவருடைய பிரச்சனை என்னவென்று எனக்குத் தெரியும், ஆனால், பாருங்கள், சற்றுப் பொறுத்திருங்கள், ஒருவேளை அது மாறலாம். நிச்சயமாக சாத்தியமற்றது அல்ல, ஆனால் நீங்கள் அந்த அடைப்புக்குறியிலிருந்து வெளியே வர வேண்டும். அவரால் தனக்காக விசுவாசிக்க முடியவில்லை. அவருக்காக விசுவாசிக்க வேண்டும். 210 ஒரு பெண்மணி சிறுநீரகக் கோளாறினால் (kidney trouble) அவதிப் படுகிறாள். அவள் இங்கிருந்து வரவில்லை. அவள் மிசிசிப்பியைச் சேர்ந்தவள். அவள் தன் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால், தேவன் சிறுநீரகக் கோளாறைச் சுகமாக்குவார். திருமதி பால்மர், உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் விசுவாசித்தால், நீங்கள் அதிலிருந்து சுகமடையலாம். அது உங்களை விட்டு நீங்கிவிட்டது. ஒளி (Light) அவள் மேல் திரும்பியது. அது அவளை விட்டுப் போய்விட்டது. தேவன் பேரில் விசுவாசம் வையுங்கள். சந்தேகப்படாதீர்கள். 211 அவளுக்குப் பக்கத்தில் ஒரு பெண்மணி அமர்ந்திருக்கிறாள். அவள் மூட்டு வலியினால் (arthritis) அவதிப்படுகிறாள். நான் தேவனுடைய தீர்க்கதரிசி என்று என்னை நம்புகிறீர்களா, அம்மையாரே? நம்புகிறீர்களா? நீங்கள் யார் என்று தேவன் என்னிடம் சொன்னால், அது நீங்கள் விசுவாசிக்க உதவுமா என்று நம்புகிறீர்களா? உங்கள் பெயர் திருமதி மெடோ. இப்போது உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள், நீங்களும் சுகமடையலாம். 212 அது அவளுக்குப் பக்கத்திலுள்ள ஒரு பெண்மணிக்குப் பற்றிக்கொண்டது. அவரும் அங்கே அமர்ந்திருக்கிறார். இதோ அது போகிறது, வரிசையாகக் கீழே. அங்கே அமர்ந்திருக்கும் ஒரு பெண்மணி, அவள் அவதிப்படுகிறாள்... அவளுக்குப் பக்கத்தில், ஒரு சர்க்கரை வியாதியினால் (sugar diabetes), நீரிழிவு நோயினால் அவதிப் படுகிறாள். அவள் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள், ஆனால் அவள் அதைச் செய்ய மறுக்கிறாள். அவள் ஒரு மகனுக்காகவும் ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். அந்த மகன் இங்கே இல்லை, ஆனால் அந்த மகனுக்கு என்ன பிரச்சனை என்று தேவனால் என்னிடம் சொல்ல முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? அவனுக்கு இருதயக் கோளாறு (heart trouble) இருக்கிறது. நீங்கள் விசுவாசியுங்கள், அவர் உங்களைச் சுகமாக்குவார். நீங்கள் யார் என்று தேவனால் என்னிடம் சொல்ல முடியும் என்று நம்புகிறீர்களா? திருமதி டஃப்லி (Dufflee), D-u, double f, l, double e. ஒரு விதமான... அது சரி. அது சரியானால், உங்கள் கையை உயர்த்துங்கள், கைகளை மேலே வைத்து. சரி. இப்போது நீங்கள் விசுவாசியுங்கள், நீங்களும் நன்றாக்கப் படலாம். 213 அது அதே காரியம்தான் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா... இயேசு கிறிஸ்துவின் பிரசன்னம் இப்போது இங்கே இருக்கிறது என்று நீங்கள் விசுவாசிக் கிறீர்களா? எத்தனை பேர் அதை ஏற்றுக்கொள்கிறீர்கள்? ஓ, என்ன ஒரு பாதுகாப்பு! என்ன ஒரு பாதுகாப்பு! "214 பாருங்கள், நீங்கள் என்ன செய்தீர்கள்? நீங்கள் அவரை எழுப்பினீர்கள். நீங்கள் அவரைச் சம்பவ இடத்திற்கு அழைத்தீர்கள். இதோ அவர் சம்பவ இடத்தில் இருக்கிறார். இப்போது, படகு என்ன சொல்கிறது என்பது ஒரு பொருட்டல்ல. நினைவில் கொள்ளுங்கள், ""இரையாதே, அமைதலாயிரு"" என்று அவரால் சொல்ல முடியும். " "215 உங்கள் முழு இருதயத்தோடும் அதை விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால், உங்கள் கால்களில் எழுந்து நின்று அதை ஏற்றுக் கொள்ளுங்கள். எழுந்து நின்று, ""நான் என் முழு இருதயத்தோடும் அதை விசுவாசிக்கிறேன்"" என்று சொல்லுங்கள். " "நேராக உங்கள் கால்களில் எழுந்து நில்லுங்கள். ""நான் இப்போது விசுவாசிக் கிறேன்."" அது சரி, உங்கள் பிரச்சனை என்னவாக இருந்தாலும் பரவாயில்லை, எழுந்து நில்லுங்கள், அவருக்குத் துதி செலுத்துங்கள். " 216 பரலோக பிதாவே, இந்தக் கூட்டத்தை உம்மிடம் கொண்டு வருகிறோம். நீர் இங்கே இருக்கிறீர் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள் ஆண்டவரே. ஒவ் வொரு பிசாசும், அவிசுவாசமும், அது தனது பிடியை விட்டு விலகட்டும், இயேசு கிறிஸ்து உங்கள் அனைவரையும் சுகமாக்குவாராக. 217 சாத்தானே, இந்தக் கூட்டத்திலிருந்து வெளியே வா! இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நீ வெறுக்கப்படுகிறாய்.